பற்றின் தொடக்கம் எதுவென பார்த்தேன்;

படைத்தவர் பண்பெனும் அருளிலாம்.

முற்றும் இதனை ஆய்ந்தும் பார்த்தேன்;

முதலும் முடிவும் அதுவேயாம்.

பெற்றுக் கொண்டவர் பண்பையும் பார்த்தேன்;

பெருந்தீதென்னும் பொருளிலாம்.

சற்றும் தகுதி அற்றதும் பார்த்தேன்.

தெய்வ அன்பு இதுவேயாம்!

(தொடக்க நூல் 6:8 & 9: 20-29)

May be an image of 1 person

அன்றைய மனிதரில் ஒருவன் இருந்தான்;

அவன் பெயர் நோவா என்பதாம்.

தன்னுடன் சேர்த்து தன் வீட்டாரை,

தப்ப வைத்தது உண்மையாம்.

இன்றைய மனிதர் இவனிடம் கற்க,

இருக்க வேண்டிய தென்னதாம்?

நன்றாய் அறிந்து நாம் பிடிப்போம்,

நற்பற்றுறுதி பண்பையாம்!

(தொடக்க நூல் 5:28-9:29)

No photo description available.

3. அழிவு!

நல்லது என்று நானிலம் படைத்த

நல்லிறை வருத்தி வாழாதீர்.

சொல்வது கேட்டு நடப்பது நன்மை;

சொரியும் மழையில் வீழாதீர்.

எல்லையில்லாத இறையின் அன்பை,

ஏளனம் செய்து அலையாதீர்.

தொல்லை தருவர் துயரே பெறுவர்;

தெய்வம் இலாது தொலையாதீர்!

(தொடக்க நூல் 6:1-7).

May be an image of body of water

எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும்,

யாவரும் அடிமையாயில்லை.

அங்கும் இங்கும் சிலரிருப்பார்;

அவரும் கெடுப்பவராயில்லை.

தங்கள் நிலையை அவருணர்வார்;

தம்மைத் தாழ்த்தி வேண்டுவார்.

இங்கே இறையும் இறங்கி வருவார்;

இனிதாய் வாழத் தூண்டுவார்!

(தொடக்க நூல் 4:25-26)

No photo description available.

தீதை அடக்கும் வழிமுறை உண்டோ?

தெய்வத்திடம் நாம் கேட்போமே.

பாதை தெரியார் காண்பது என்றோ?

பார்த்து அவரையும் மீட்போமே.

நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்;

நாமும் செய்து வாழ்வோமே.

வாதை என்று வாயிலில் கிடக்கும்,

வலிய தீதை ஆள்வோமே!

(தொடக்க நூல் 4:7)

May be an image of 1 person

தீதின் வளர்ச்சி!

4. தீதின் வளர்ச்சி!

சிறு விதையாகத் தொடங்கிய தீது,

சிகரம் தேடும் மரமாய் வளர்ந்து,

பெரு நிலம் முழுதும் படர்ந்து பரந்து,

பிள்ளைக்கனியை நஞ்சாய்த் தருதே.

குறுமதிகொண்ட நெஞ்சின் சூது,

கொடுமைகளுக்கு ஊற்றாய் இருந்து,

தெரு முனை நாடு நகரம் இணைத்து,

தெளிவு அழிக்கும் ஆறாய் வருதே!

(தொடக்க நூல் 4).

No photo description available.

அம்மண அவலம் அழகு என்று,

அவிழ்த்து போடுகிறார் இன்று.

தம்முளம் குத்திக் காட்ட அன்று,

தவறை மூடியவர் உண்டு.

செம்மனமாக நம் மனம் திகழ,

செய்தார் இறைவன் ஒரு பலி.

நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ,

நமக்கு அருளிய அவர் வழி!

(தொடக்க நூல் 3)

May be an image of fig and text that says 'the fig leaf conspiracy JIMMY EVANS'

தீதின் தன்மை எப்படி கெடுக்கும்?

தெய்வம் விட்டுப் பிரிக்கும்.

தூதின் வலிமை போர் தொடுக்கும்;

தீய நெஞ்சையும் பிரிக்கும்.

கோதின் கூட்டு என்று விளிக்கும்,

கொடுமை பிறரையும் பிரிக்கும்.

சூதின் வாழ்வு தொடர்ந்து அழிக்கும்;

சுற்று முற்றும் பிரிக்கும்!

(தொடக்க நூல் 3)

May be an image of text that says 'GENESIS3 THE FALL OF MAN'

இறை கீழடியில் இருக்கும் மனிதன்

இறையாய் உயரப் பாய்ந்திடில்,

கறை மாறாத களங்கம் அடைந்து,

கடவுளை விட்டு விழுவானே.

முறை தவறாக முயலும் ஒருவன்,

முதலில் தன்னை ஆய்ந்திடில்,

குறை காணாது, திருத்தியமைக்கும்,

கோனினருளால் எழுவானே!

(தொடக்க நூல் 3:1-24).

May be an image of text

கொடுத்தவர் வாக்கை நம்பாமல்,

கொடியோன் பொய்யை ஏற்கிறார்.

அடுக்கடுக்காய் பல தவறிழைத்து,

அடிமையாய்த்தமை விற்கிறார்.

கெடுப்பவர் யார் என அறியாமல்,

கீழ்ப்படியாதராய் நிற்கிறார்.

தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்;

தலைவனை நம்பார் தோற்கிறார்!

(தொடக்க நூல் 3:1-24).

May be an illustration