எளிமை பூண்டு…

Image may contain: sky, text, outdoor and nature

அவரது எளிமையில்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:51-52.
51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
கிறித்துவில் வாழ்வு:
பெருமை என்னும் பெரும்பேய் பிடித்து,
பெயரை இழந்தவர் பலருண்டு.
சிறுமை எனினும் நன்மை புரிந்து,
சிறப்புடன் வாழ்ந்தவர் சிலருண்டு.
வெறுமையாகும் இப்புவிப் பெருமை,
வீண் வீண் என உணர்வோமே.
அருமையான திருமகன் கண்டு,
அவரது எளிமையில் இணைவோமே!.
ஆமென்
LikeShow More Reactions

Comment

ஒளி நாள் வாழ்த்து!

ஒளி நாள் வாழ்த்து!

ஒளியாம் இறையை உண்மையில் உணர்ந்து,
ஒழுக்கம் வளர வாழுங்கள்.
வெளி ஆள் என்று வெடி கொளுத்தாது,
விளக்காய் ஒளிர வாழ்த்துகள்!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!

ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!

கற்றவர் என்று கணக்கைக் காட்டி,
காசால் பதவியை வாங்குகிறார்.
மற்றவர் படுந்துயர் உணராதவராய்,
மடியராய்ப் பணியில் தூங்குகிறார்.
ஒற்றைக் காசையும் உருவி எடுத்து,
ஊழலில் தலைமை தாங்குகிறார்.
உற்றவருக்கே உதவி என்றானதால்,
ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!

Image may contain: 1 person, smiling, text
LikeShow More Reactions

Comment

இரக்கம் என்பது இறைவனின் பண்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:50.

50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

கிறித்துவில் வாழ்வு:
இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம், நம்பு.
அரக்கத் தன்மை தருமே வம்பு;
அதனைவிட்டு, அடைவாய் அன்பு.
திரைக் கதையல்ல உந்தன் வாழ்வு;
திருப்பி அடித்தோர் முடிவையும் கேளு!
உரக்கக் கூறும் உண்மையில் வாழு;
உனக்கு வராது இனிமேல் தாழ்வு!
ஆமென்.