வாக்கில் வல்லமை!

வாக்கில் வல்லமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:31-32.
31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
யாழின் நரம்பு முறுக்கானால்,
இன்னிசை, பாடல் நாக்கில் வரும்.
வாழ்வில் நேர்மை உருக்கானால்,
வாய்மை, வல்லமை வாக்கில் வரும்.
தூளின் எழுச்சி இரைவதுபோல்
தோன்றி மறையும் நம்வாக்கால்,
தாழும் மதிப்பை நாம் புரிந்து,
தவற்றை விடுவோம், வாழ்வுவரும்!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Comments

யூதரின் தவறான எண்ணமும் செயலும்!

a_bucketful_of_zionism_2_638.jpg

யூதரின் தவறான எண்ணமும் செயலும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:28-30.
28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
இறைவனின் மக்கள் ஒரு சிலர்தானோ?
இப்படி எண்ணுதல் நேர்மைதானோ?
முறைப்படி தந்தை ஒருவனுக்கென்றால்,
மூத்தவன் யூதன் தவறினான் அன்றோ?
உரைத்திடும் மீட்பை உலகம் அறிய,
ஓரினம் முதலில் தேர்வானாலும்,
நிறைத்திடும் அருளால் யாவரும் இன்று,
நேர்மை இறையின் மக்கள் அன்றோ?
ஆமென்.

அலைபேசி செய்யும் கொலை!

அலைபேசி செய்யும் கொலை!

-கெர்சோம் செல்லையா.

தொலைபேசி வரலாற்றில் அலைபேசி ஒரு புரட்சியே. விலை பேசி வாங்காதவரும், அலைபேசியெனில், தலை சாய்த்து வாங்குவார்கள். கலைப் பொலிவுள்ள, கையளவு பெட்டியால், கதைக்கலாம், காட்டும் படம் பார்த்துச் சிரிக்கலாம்; செய்தியும் வாசிக்கலாம். காணும் காட்சியைப் படமெடுக்க வேறு பெட்டி தேவையில்லை; அலைபேசியாலே பிடிக்கலாம்; அதை உடனடியாகவே பார்க்கலாம்; அதையும் நம் விருப்பபடி அழகு படுத்தலாம்.
எண்ணற்றப் பயன்பாட்டை அலைபேசி தருவதனால், கண்ணற்றுப் போனார்கள் நம்மவர்கள். எங்கு நிற்கிறோம், என்ன செய்கிறோம் என்றுகூடத் தெரியாமல், பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே செல்கிறார்கள். இன்னும் சிலரோ, எதிரே இருப்பவரைத் திட்டுவதுபோல் ஏசுகிறார்கள், ஏசுகிறார்கள், ஏசிக்கொண்டே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அமைதியில் அமர உரிமையுண்டு என்பதை மறந்து, இவர்கள் வீட்டுச் சாக்கடையை யாவருக்கும் பகிருகிறார்கள். இவைகள் இப்படியிருக்க, சாலையில் நடக்கும்போதும், வண்டிகள் ஓட்டும்போதும், கையோ, கழுத்தோ அலைபேசிக்குக் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணுபவர்கள் இன்று நம்மில் உண்டா?

சில நாட்களுக்கு முன்பு, விபத்து நடந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இறந்தவர் இளைஞர். இன்னும் திருமணம் ஆகாதவர். இரண்டு தங்கைகளின் அண்ணன். பெரிய நிறுவனத்தில் பெருஞ்சம்பளத்தில் வேலை. பேசியபடியே ஒரு வண்டியில் மோதி, ஒரு சேதமுமின்றி தப்பினார். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்ல, மீண்டும் பேச்சு. காவலர்கள் அமைதியாய் இருக்கச் சொல்லியும் அடங்காப் பேச்சு. முன் நிற்பவர் யார் தெரியாது. தான் நிற்கும் இடமும் தெரியாது. வந்து போகும் வண்டிகளின் ஒலி ஓசையின் செய்தியும் தெரியாது. எதுவும் தெரியாமல் பேசிக்கொண்டிருந்த இவரை, எதுவும் கூறாமலே இடித்துப் போட்டுச் சென்றான் எதுவும் செய்ய இயலாத ஒரு வண்டிக்காரன். கண்விழித்துக் காவற்பணிபுரிந்தும், காப்பாற்ற இயலாத காவல்துறை நண்பர்கள், கவலையுடன் சொன்னார்கள்:
இது, அலைபேசி செய்த கொலை!

எனது இனிய நண்பர்களே, பேசுங்கள்; நன்றாகப் பேசுங்கள். உங்கள் பேச்சைவிடவும் உங்கள் உயிர்மூச்சு பெரிதென்று உங்கள் வீட்டார் சொல்வதைக் கேட்டு, புரிந்து, தெரிந்து, பின் பேசுங்கள்!

இறையருளில் வாழ்வீராக!

Image may contain: one or more people and motorcycle
LikeShow More Reactions

Comment

இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!

இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:21-24.
21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
மற்றவர் பார்வையில் சிறப்பைப் பெற்றும்,
மனையோர், ஊரார் மதிக்கவில்லை.
உற்றவர், உறவுகள் உதவிகள் உற்றும்,
ஒருவரைப் பார்க்கவும் விதிக்கவில்லை.
கற்றவர் வந்து ஏற்பார் என்றால்,
காட்சிக்கு விளம்பரம் பதிக்கவில்லை.
பொற்றவம் ஏற்ற உம்மைப் பார்த்தேன்;
பொறுமையில் குருதி கொதிக்கவில்லை!
ஆமென்.

No automatic alt text available.

மறக்கமுடியாத 13-09-1978.

மறக்கமுடியாத 13-09-1978.

நாற்பது ஆண்டுகள் முன்னே,
நம்ப மறுத்து, அலைந்தேன்.
ஏற்பது எல்லாம் இழந்தே,
இறைவன் இன்றி, குலைந்தேன்.
தோற்பது ஏன் என் வாழ்வே?
துயரையே கேட்டு அழுதேன்.
பார்ப்பது யாரெனக் கேட்டார்.
பதில்தர, இயேசுவைத் தொழுதேன்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, suit

அருட்பொழிவு எதற்காக?

அருட்பொழிவு எதற்காக?No automatic alt text available.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
 
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
 
கிறித்துவில் வாழ்வு:
அருட்பொழிவென்பது எதற்காக?
ஆடிப்பாடி உருள்வதற்கா?
திருப்பிடும் வரங்கள் வீணடித்தால்,
தெய்வ ஆவியர் வருந்தாரா?
இருளில் இருக்கும் ஏழைக்கும்,
ஏங்கித் தவிக்கும் அடிமைக்கும்,
பொருளறியாத கண்ணிற்கும்,
பொழியும் விடுதலை, திருந்தாரா?
ஆமென்.

நன்கு கேட்பாய் இறைச்செய்தி!

நன்கு கேட்பாய் இறைச்செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

கிறித்துவில் வாழ்வு:
இன்று வராதா நற்செய்தி?
என்று எங்கும் ஏழையரும்,
கன்று போன்று துள்ளுகிறார்;
கடவுளின் அருளை அள்ளுகிறார்.
நின்று கேட்கும் என் நண்பா,
நீயும் ஆவியில் நிறைவதற்கு,
நன்கு கேட்பாய் இறைச்செய்தி;
நமக்கு அதுதான் நற்செய்தி!
ஆமென்.

Image may contain: 8 people, including Wilson Shankey B, people standing and outdoor
LikeShow More Reactions

முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!

Image may contain: one or more people, people standing and outdoor

முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:14-15.
14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
பெருந்தொகை வருவாய் வருமேயென்றால்,
பெரியரும், சிறியரும் முன்வருவார்.
இருப்பதை இழக்கும் இறைப்பணியென்றால்,
யார்தான் இயேசு பின்வருவார்?
திருப்பணிக்கென்றே தெய்வ மகனார்,
திக்குகள் எட்டும் நடக்கின்றார்.
அருட்பலி காணும் அந்த நாட்டார்,
அவர்முன் கால்களை முடக்கின்றார்!
ஆமென்.

தலைவர்களே கேளுங்கள்!

தலைவர்களே கேளுங்கள்!

இந்தியர் வாழவே வாழ்வோம்;
ஏழையர் விழுவின் விழுவோம்.
முந்தைய நாள்போல் பிரியோம்;
முரடராய், வெறியராய்த் திரியோம்.
தந்தையாய்ப் பிறரை மதிப்போம்;
தவற்றினை மட்டுமே மிதிப்போம்.
விந்தையாய் உயர உழைப்போம்.
விண்ணின் அருளால் தழைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

அதிசயமானவர்!

அதிசயமானவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:9-13.

9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

கிறித்துவில் வாழ்வு:
அதிசயம் என்ற சொல்லிற்கு,
ஆட்சியாளர் இறைமகனார்.
பதிலைக் கேட்கும் வேண்டலுக்குப்
பரிசாய்த் தருகிறார் நிறைமகனார்.
சோதனை ஐயம் கொள்ளாது,
சொந்தம் என்றே நம்பிடுவீர்.
மேதினி அறியா அதிசயத்தை,
மேலும் செய்வார், கும்பிடுவீர்.
ஆமென்.

Image may contain: sky, cloud, twilight, outdoor and nature
LikeShow More Reactions

Comment