யோவான் 11:16.

இறை வாழ்வு:


ஈராறு அடியரில் ஒருவர் தோமா. 

இவரது துணிவைப் பார்க்கலாமா?

ஊரார் கொலைவெறி தெரிந்திருந்தும் 

ஒளியார், இவர் தோற்கலாமா?

பேராறு அருளைப் பெற்றவர் தோமா. 

பிறரை இழுப்பதும் பார்க்கலாமா?

தேறாது அழுகிற துயருற்றவரும் 

தெளிவார், இவரை ஏற்கலாமா? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

கிறித்து பிறப்பின் வாழ்த்து!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

பிறக்கும் நோக்கம் புரியார் புரிய,
பிள்ளை ஒருவர் பிறக்கிறார்.
திறக்கும் புது வழி தெரியார் தெரிய,
தெய்வ மகனாய்ப் பிறக்கிறார்.
இரக்கம் அவ்வழி, என்றே உணர்த்த,
இரங்கும் மீட்பர் பிறக்கிறார்.
நிறைக்கும் அன்பில், நேர்மை புணர்த்த,
நெஞ்சில் இயேசு பிறக்கிறார்!

Merry Christmas ❣️

-கெர்சோம் செல்லையா.

உறக்கம்!

உறக்கம்!

வாக்கு: யோவான் 11:11-15. 

வாழ்வு:

இரவில் உறங்கி விழுவது போல,

இறப்பவர் விழுவது தெரிகிறது. 

உறக்கம் கலைய எழுவது போல,

உயிர்ப்பவர் எழுவதும் தெரிகிறது. 

எரிகிற நெருப்புள் முடிவது போல, 

ஏற்கார் முடிவு தெரிகிறது.

விரிகிற ஒளிக்கதிர் விடிவது போல,

விண்ணக விடிவும் தெரிகிறது!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

ஒளி!

ஒளி வீசுவோம்!

வாக்கு: யோவான் 11: 8-10. 

வாழ்வு:

கல்லால் அடிக்க வந்திருந்தும்,

கண்ட நெஞ்சம் நொந்திருந்தும்,

பொல்லார் என்று வெறுக்காமல்,

புவிக்கு ஒளி தருபவர் யார்?

சொல்லாம் இயேசு செல்வதுபோல்,

சொற்படி நடந்து வெல்பவராய்,

எல்லாயிருளையும் அகற்றிவிட, 

இயேசு வழி வருபவர் யார்?

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:5-7

  1. காலம் தாழ்ந்து வருபவர் என்று
  2. கடவுளை சிலபேர் பார்க்கிறார். 
  3. ஓலம் கூட உச்சியில் சென்று
  4. ஒலிக்கவே பலரும் ஏற்கிறார்.
  5. வேலம் பட்டைக் கருத்து தின்று, 
  6. வீணாய் நிற்பவர் தோற்கிறார்.
  7. ஞாலம் மீட்க, நீட்டம் நன்று;
  8. நம்பின், நல்லிறை சேர்க்கிறார்! 
  9. ஆமென். 
  10. -கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:4

இறை மாட்சி!


எதைச் செய்தாலும் இறையாட்சிக்கு,

என்று வாழ்தல் கிறித்தவம். 

அதன் விளைவும் அவர் மாட்சிக்கு, 

அமைய விரும்பின் நெறித்தனம்.  

இதைத் துறந்த இன்றையப் போக்கு,

எதனால் என்றால், வெறித்தனம். 

விதைக்கும் முன்னே, விளைவை நோக்கு;

வேண்டாம் என்றும் நரித்தனம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:1-3

வாக்கு: யோவான் 11:1-3. 

வாழ்வு:


பிணி, மூப்பு, சாவு,

பிறப்பு தொட்டு உண்டு.

இனி வராது என்று, 

இயம்புகிறவர் மண்டு!

அணி அணியாய் அன்று,

அழைக்கு முன்னே கண்டு,

பணி இயேசுவை இன்று,

பகிரும் அன்பு கொண்டு!


ஆமென்.

இறை அதிசயம்!

இறை அதிசயம்!
வாக்கு: யோவான் 10:41-42.

வாழ்வு:


அருட்பணி ஆயிரம் புரிந்தாலும், 

அன்பில் சேர்ந்து திரிந்தாலும்,

விருப்புடன் மனிதர்கள் தேடுவது,

விதியை மாற்றும்  அதிசயமே!

திருப்பணித் தளங்களில் காணுகிற,

தேய்ந்தோர் நலத்தைப் பேணுகிற 

பெருந்திரள் கூட்ட  அருஞ்செயல்கள், 

புரிவாய், இறை அதிசயமே!


ஆமென். 

கெர்சோம் செல்லையா. 

எவ்வளவு உண்மை?

எத்தனை விழுக்காடு உண்மை?


எத்தனை விழுக்காடென்று  பார்த்தேன்;

என்னுள் உண்மை எவ்வளவு?

அத்தனை அளவாய்  ஆண்டவர் பார்த்தேன்;

அறிவுக் குறைவு அவ்வளவு!

மொத்தமும் உண்மையாக்கக் கேட்டேன்;

மும்மை இறையின் அளவு. 

நித்தமும் வளரச் சொல்வதும் கேட்டேன்;

நிறைக்கும் அருளின் அளவு!


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 10:39-40.

காப்பவர் இறைவன்!

வாழ்வு:


என்னிடம் ஒருவர் சொன்னதுபோலே, 

என் தலை போகலை கழுத்துமேலே. 

இன்றின்னேரமும் அதே நிலையே; 

இயேசுதானே என் தலையே! 

முன்னவர் குறித்த நாளின் முன்பே,

முடிவு வருமோ? முடியாதன்பே!

நன்னாள் அந்நாள் இறைநாளென்றே,

நம்பி முடிப்போம் நற்பணி ஒன்றே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.