இயேசுவே வாழ்வு!

இயேசுவே வாழ்வு!

நற்செய்தி: யோவான் 6:55-58.  
55. என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
56. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
57. ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
58. வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.  


நல்வழி:


குலைந்து போகும் வாழ்க்கை கண்டு,

குமுறும் எந்தன் நல் நண்பா,

கலைந்து போகா வாழ்வு உண்டு;

கடவுள் வாக்கு கேள் அன்பா.

தொலைந்து போனோர் மீள்தல் கண்டு, 

தூய்மையாக, நினை நண்பா.

அலைந்து தேடும் இயேசு உண்டு;

அவரே வாழ்வு, இணை அன்பா!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

திருவிருந்து!

திருவிருந்து!நற்செய்தி:

யோவான் 6:52-54.52.

அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.53. அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.54. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

நல்வழி:

பிட்டு, கிறித்து தன் சதை தந்தார்;

விட்டு, உயிரின் குருதியும் தந்தார்.

கெட்டு, அழிவார் மீட்டெடுக்க,

கொட்டுகின்ற, திருவிருந்தானார்.

எட்டு திக்கும் மனிதர் வந்தார்;

ஒட்டு தீங்கை விட்டிட வந்தார்.

திட்டு வாக்கு கூறார் அணைக்க,

மட்டு காணா மறு விருந்தானார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உயிர் தரும் உணவு!

உயிர் தரும்  உணவு!
நற்செய்தி: யோவான் 6:48-51.

நல்வழி:


மூன்று வேளை உணவுண்டாலும்,

முடிவில் உயிரைக் காத்திடுமா?

தோன்று வழிகள் பல கண்டாலும்,

தேயா வாழ்வுள் சேர்த்திடுமா?

ஈன்று இங்கே இறங்கி வந்த,

இயேசுவின் வாக்கு காத்திடுமே.

சான்று பகரும் அவர் விருந்துண்டு,

சாகா வாழ்வும் சேர்த்திடுமே.


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

எண்பதும்! இருபதும்!

எண்பதும் இருபதும்!


ஐந்தில் ஒன்றை அடிக்க இன்று,

ஐந்தில் நான்கு துடிக்கிறது.

மந்தை ஒன்றைத் திரட்டிச் சென்று,

மத வெறியாலே பிடிக்கிறது.

“இந்திய நாட்டின் மக்கள் ஒன்று”

என்னும் நினைப்பே வெடிக்கிறது.

எந்தன் காலே, தலைமேல் நின்று,

என் உயிரைக் குடிக்கிறது!


-கெர்சோம் செல்லையா.

மெய்!

மெய் அறிவீர்!நற்செய்தி: யோவான்: 6:45-47.45.

எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

மெய்மை நாடின், மெய்மை காண்பார்;

மேன்மை வாழ்வு பெற்றிடுவார்.

பொய்மை தேடின், பொய்மை காண்பார்;

பொல்லா வழியே கற்றிடுவார்.

தூய்மைப் பண்பே தெய்வம் என்பார்,

திருமகன் ஏசுவில் கண்டிடுவார்.

வாய்மை எங்கே? அங்கே, இறை பார்!

வராதார் அழிவே அண்டிடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இழுக்கும் இறை!

இழுக்கும் இறைவன்!
நற்செய்தி: யோவான் 6:43-44.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
நல்வழி:
தந்தை இழுக்க, மைந்தன் அழைப்பார்.
தாவி அணைக்கும் ஆவியர் உழைப்பார்.
விந்தை அரசுள் வேந்தன் நுழைப்பார்.
விடுதலையாளர் கண் விழிப்பார்.
நிந்தை நீக்கும் இறைமகன் வருவார்.
நேர்மைக்குரிய பரிசைத் தருவார்.
எந்தை தாயும் உறவும் பெறுவார்.
இறையருளாளர் இன்பமுறுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

முறுமுறுப்பு!

யோவான்

நல்வழி: 6:41-42.


முன்பு நின்று பேச மறுப்பார்;

மூக்கு திருப்பி முறு முறுப்பார்.

நன்கு இவரைப் புரிந்திருப்பார்,

நட்பு கொள்ளவும் வெறுப்பார்.

அன்று யூதர் முறு முறுத்தார். 

அழிவு காண இறை மறுத்தார்.

சென்று போன நிகழ்வறிந்தார்,

சிறிதளவும் முறு முறுக்கார்! 

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.