இனி காணோம்!

நற்செய்தி: யோவான் 11:33-35. 

இனி காணோம் என்கிற எண்ணம்,

ஈரக்குலையை இறுக்குகையில்,

மனிதர் விலங்கு பறவைகளும், 

மடிவார்முன் கலங்கிடுமே.

பிணி, மூப்பு, சாவின் முன்னம்,

புது வாழ்வு தெரியுமெனில்,

கனி உண்பார் களிப்பதுபோல்,

கண்ணீரும் துலங்கிடுமே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

கால் பிடித்தல்!

கால் பிடித்தல்!

செய்யுட் செய்தி!

செய்தி:யோவான் 11: 31-32.

31. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.

செய்யுள்:

மார்த்தாள் சொன்ன சொல் எடுத்து,

மரியாள் கூறி நில்லாது,

பார்ப்பார் என்ற கவலை விடுத்து,

பற்றில் கால் பிடிக்கிறார்.

ஆர்ப்பார் தந்த வாக்கினடுத்து,

அறிந்து மட்டும் செல்லாது,

தீர்ப்பார் குறைகள் எனப் படுத்து,

தெய்வக் கால் பிடிக்க, பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அழைக்கும் இயேசு!

அழைக்கும் இயேசு!

செய்தி; யோவான் 11:28-30.  

செய்யுள்:


இறைமகன் வருகிறார் பாருங்கள். 

இயேசு அழைக்கிறார் வாருங்கள். 

குறையினை நீக்குவார் பாருங்கள்.

கொடுக்கும் ஆசிகள் வாருங்கள்.

அறையினில் அழுபவர் வாருங்கள். 

ஆண்டவர் அதிசயம் பாருங்கள். 

நிறைவாழ்வடைவீர் வாருங்கள்; 

நிரம்பும் மகிழ்வும் பாருங்கள்!


-ஆமென்.


-கெர்சோம் செல்லையா.  

அம்மா!

அம்மா, எங்கள் அம்மா!


பேறுபெற்ற பெற்றோர் கண்டார். 

பெயருற்ற  கணவனும் கொண்டார். 

ஊறு செய்யா வாழ்க்கை  கண்டார்;

ஊர்ப்பணியில்  மகிழவும்  கொண்டார்.

ஆறு பிள்ளைகள் பெற்றுத் தந்தார்;

அறிவூட்டியே   வளர்த்தும்  வந்தார்.

கூறு போடாப்  பற்றைத்  தந்தார்; 

கிறித்தவராகவும்  நடத்தி வந்தார். 

மாறுமுலகில் நேர்வழி என்றார்;

மறையா அன்பும் தந்து சென்றார். 

நூறு பேறுகள் பெறுவீர் என்றார்;

நோக்கும்போதே, இறையுள் சென்றார்!


(இன்று எங்கள் அம்மா,

கிளாறிபெல் செல்லையாவின், 

நினைவு நாள்)

இறைமகன்!

செய்யுட் செய்தி!
இறை மைந்தன்!செய்தி:யோவான் 11:27. 

செய்யுள்:


பல்லுயிர் படைத்துப் பரிவுடன் காக்கும்,  

பரத்தின் அரசே இறைவன். 

நல்லருள் வாக்கின் வலுவால் மீட்கும்,

நன்மையின் உருவே இறைவன். 

இல்லையென்பாரும் இரக்கம் சேர்க்கும்,

இனிய தந்தையே இறைவன்.

எல்லா இனத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும்,


இயேசு மைந்தனே இறைவன்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

உயிர்ப்பு!

உயிர்ப்பு!
வாக்கு: யோவான் 11:23-26.

வாழ்வு:


இறப்பின் பின்னர் எது நடக்கும்?

எம்மறிவிற்குத் தெரியலையே!

பிறப்பின் ஏதும் புதிராயிருக்கும்; 

பேசும் உயிர்ப்பும் புரியலையே! 

திறப்பின் வாசல் எதுவாயிருக்கும்?

தெய்வம் தவிர பேறிலையே. 

சிறப்பின் வாழ்வு நமதாயிருக்கும்;

சேர்க்க, பற்றன்றி வேறிலையே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பாழிடம் பார்க்குமுன்!

பாழிடம் பார்க்குமுன்!
வாக்கு; யோவான் 11: 21-22.

வாழ்வு:


வாழ்வின் பொருளே இயேசு;

வழங்குபவரும் இயேசு. 

வீழ்வோர் வேண்டுவார் இயேசு. 

விடுதலையாக்குவார் இயேசு.

தாழ்வில் நினைப்போம் இயேசு. 

தகுதியாக்குவார் இயேசு. 

பாழிடம் பார்க்குமுன், இயேசு

பார்க்க, பார்ப்போம் இயேசு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.   

யார் ஏழை? கேட்டது அன்பு!

யார் ஏழை? கேட்பது அன்பு!

ஈரேழு ஆண்டுகள் முன்பு

ஏழையூர் ஒன்று சென்றோம்.

சீரேசு ஆண்டவர் பின்பு

சிலபேர் வருவது கண்டோம்.

தீராத ஆவல்கள் கொண்டு,

திரும்பவும் அங்கு சென்றோம்.

யாரேழை? கேட்டது அன்பு!

எம் தலை தாழக் கண்டோம்!

-கெர்சோம் செல்லையா.