ஊண் உடை நல்கும்!

ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:
10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
மானம் மறைக்க உடுப்பவராயினும்,
மதிப்பிற்கென்று எடுப்பவராயினும்,
ஈனப் பிறவியாய் விடுப்பவராயினும்,
ஈருடை சேர்த்து அணிவாருண்டோ?
வானம் வரைக்கும் நம் புகழ் செல்லும்;
வையகத்தாரின் வாய்களும் சொல்லும்;
ஆனவரைக்கும் ஊண் உடை நல்கும்;
அதுவே அறமெனப் பணிவாருண்டோ?
ஆமென்.

Image may contain: one or more people

பேயே!

பேயே!

கணினியைக் காணும் கண்ணே,
கழனியைக் காண மறந்தாயே.

உணவினைத் தரும் இக்கையே,
ஓங்குக; இல்லை, இறந்தாயே.

பிணவறை நாற்றம் போன்றே,
பேசுதே மனிதர் வாயே.

பணந்தான் வாழ்க்கை என்றே,
பழகுவோர் நாட்டில் பேயே!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
Image may contain: one or more people, grass, outdoor and nature
LikeShow More Reactions

Comment

கனியற்ற மரம்!

Image may contain: outdoor and nature

கனியற்ற மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:9.

9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அடர்ந்து மரங்கள் அழகு தந்த
அருமைத் தோட்டம் கண்டேன்.
தொடர்ந்து அவைகள் புசிக்கத் தந்த,
தூய கனிகளும் உண்டேன்.
படர்ந்து வளர்ந்தும் பயனில்லாத
பாழ் மரமும் பார்த்தேன்.
விடர்ந்து வீணாய்ப் போன அதனை,

வெட்டி எரிக்கச் சேர்த்தேன்!

ஆமென்.

பெற்றோர் நேர்மை

பெற்றோர் நேர்மை பிள்ளையில் உண்டோ?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:8.
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றோர் நேர்மையைப் பிள்ளையில் கண்டு,
பெரிதும் மகிழ்ந்த இனமெங்கே?
மற்றோர் வந்து தூற்றிச் செல்லும்,
மானம் கெட்டோர் தானிங்கே!
பற்றால் கிறித்துவை பார்த்துக் கொண்டு,
பண்பில்லாவிடில் பயனெங்கே?
கற்றோர் காதின் அழுக்கினுள்ளே,
கருத்தாய் முழங்குவாய் சங்கே!
ஆமென்.

Image may contain: 10 people, people standing and outdoor
LikeShow More Reactions

Comment

விரியன் பாம்புக் குட்டிகளே!

விரியன் பாம்புக் குட்டிகளே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:7.
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?

கிறித்துவில் வாழ்வு:
எரியும் நெருப்பு பரவுதல் கண்டு,
எல்லா உயிர்களும் ஓடுகையில்,
விரியன் பாம்புக் குட்டிகள்கூட,
வேகாதிருக்க ஓடிற்றே!
அரிதாம் மீட்பை அடைவதற்கென்று,
ஆன்றோர் சான்றோர் நாடுகையில்,
கரியாம் பாவக் கறைகள் கொண்ட,
கயவன் நெஞ்சும் நாடிற்றே!
ஆமென்.

Image may contain: sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
 

ஒரு வழிச் சாலை!

ஒரு வழிச் சாலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:3-6.
3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

கிறித்துவில் வாழ்வு:
பள்ளம் எல்லாம் நிரம்பிட வேண்டும்;
பாறைக் குன்றுகள் இறங்கிட வேண்டும்.
முள்ளும் காடும் முறிந்திட வேண்டும்;
முதற்கண் நேர்வழி திறந்திட வேண்டும்.
அள்ளும் மனிதர் அறிந்திட வேண்டும்;
ஆண்டவர் வழியை தெரிந்திட வேண்டும்!
துள்ளும் குழந்தையாய் நடந்திட வேண்டும்;
தூய்மையில் மட்டுமே கடந்திட வேண்டும்.
ஆமென்.

துவையல் ஆகாதிருப்பதற்கு…….

துவையல் ஆகாதிருப்பதற்கு…….

இவைகள் தவறு என்றுணர்ந்து,
இனிநான் செய்யேன் என்றோமா?
எவைகள் நேர்மை என்றறிந்து,
யானும் செய்வேன் என்போமா?
அவையில் நன்றாய் பேசிவிட்டு,
அதற்கு எதிராய்ச் சென்றோமா?
துவையல் ஆகாதிருப்பதற்கு,
தூய்மை நாடிச் செல்வோமா?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

Comments

நிலைவாழ்வு எங்கே?

நிலைவாழ்வு எங்கே?

இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: Bhakther Solomon, smiling, close-up

அறிவின் எல்லை!

அறிவு இல்லை, அறிவின் எல்லை!

வாழ்வு வழியாம் உண்மை விட்டு,
வையம் கொடுக்கும் உயர்வைப் பெற்று,
ஆள்வேன் நானும் புவிமேல் என்று, 
அடியன் சென்றால் அறிவு இல்லை!

தாழ்வில் என்னைக் கண்டுகொண்டு,
தாங்கி என்னைச் சுமந்துகொண்டு,
பாழ்பட்டோரை மீட்க இன்று,
பயன்படுத்துபவரே, அறிவின் எல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: text

இறைவனே கண் பாரய்யா!

இறைவனே கண் பாரய்யா!

செத்தவனைக் கொன்றவனாக்கிக்
கொல்பவனை உத்தமனாக்கும்,
கொடியரின் உலகமய்யா.
கோடிகளின் கலகமய்யா.

வித்தவனைத் தின்றவனாக்கித்
தின்றவனை வித்தகனாக்கும்,
வீணரின் கூட்டமய்யா;
வேண்டாம் ஆட்டமய்யா.

சத்துணவை முட்டையாக்கி,
முட்டையைக் காசுமாக்கிச்
சாப்பிட்டார் அலுவரய்யா;
சரியென்பார் தலைவரய்யா.

மொத்தமும் ஊழல் என்றால்,
முழுகுவோர் அறிவர் என்றால்,
இத்தரை வேண்டாமய்யா;
இறைவனே, கண்பாரய்யா!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food