புத்தாண்டு வாழ்த்து!


 
இறைமகன் திருப்பெயரால்
இனிய புத்தாண்டில் மகிழுவோம்.
குறைவிலா இன்பம் கூடவே இருக்கும்;
குறி தவறா வாழ்க்கை வாழுவோம்!
-செல்லையாவும் வீட்டாரும்,
இறையன்பு இல்லம்,
செக்ரெட்டேரியட் காலனி,
இரட்டை ஏரி, சென்னை-99.
நாளைய நிகழ்வு!
நற்செய்தி மாலை: மாற்கு13:3-4.
“இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, ‘ நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
நான்கு அடியர் கேட்டபோது,
நாளைய நிகழ்வை முன்னுரைத்தீர்.
ஏங்குபவர்கள் இன்றும் கேட்க,
இரண்டாம் வருகையை நன்குரைத்தீர்.
தாங்குபவராய் நீர் இருப்பதனால்,
தடுமாறாது நடக்கின்றோம்.
தூங்குவோரைத் தட்டி எழுப்ப,
தூயவாக்கால் கடக்கின்றோம்!
ஆமென்.

கட்டிய கோயில்!

கட்டிய கோயில்!
நற்செய்தி மாலை: மாற்கு13:1-2.
“இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், ‘ போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் ‘ என்று அவரிடம் சொல்ல, இயேசு அவரை நோக்கி, ‘ இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சாலமன் எழுப்பிய கோயில் எங்கே?
சரியாய்ப் பார்த்து எழுதுவீர் இங்கே.
வேலைப் பணிகளின் சிறப்பு எங்கே?
வேளை வந்தது, அழிந்தது அங்கே.
காலம் கழித்து கட்டியதெங்கே?
கல்மேல் கல்லும் காணாதங்கே.
ஞாலம் மீட்கும் இடந்தான் எங்கே?
நமது நெஞ்சக் கோயில் இங்கே!
ஆமென்.

No automatic alt text available.

எளியரின் காணிக்கை!

எளியரின் காணிக்கை!
நற்செய்தி மாலை: மாற்கு12:41-44.
“இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ‘ இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
எல்லாம் இருப்போர் ஏதோ கொடுத்தால்,
எப்படி நூற்றுக்கு நூறாகும்?
இல்லாதவர்கள் யாவும் கொடுத்தால்,
இறைவன் விரும்பும் பேறாகும்.
நல்லாயர்போல் ஏழையை மதித்தால்,
நமது திரு அவை சீராகும்.
சொல்லால் செயலால் வாழ்ந்து கொடுத்தால்,
சுற்றம் போற்றும் பேராகும்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்.

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்.
“இல்லா நிலையில் யாவும் படைத்த
இணையற்றவரே இறைவன்.
எல்லோருக்கும் மீட்பின் பொருளாய்
இப்புவி வந்தவர் மைந்தன்.
வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து,
வாழ வேண்டுமே மனிதன்.
நல்லாவியரால் நடத்தப்பட்டு,
நன்மை செய்வான் புனிதன்.”

கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,
புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்,

-செல்லையா,
இறையன்பு இல்லம்,
செக்ரெட்டேரியட் காலனி,
இரட்டை ஏரி, சென்னை.

www.iraiyanbuillam.com

பெருமையை வெல்வீர்!

பெருமையை வெல்வீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:38-40.
“இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ‘ மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
வேர்போல் வளர்ப்பீர் இறை மேல் பற்றை;
வெளியே வேண்டாம், ஆழம் செல்வீர்.
தேர்போல் குலுங்கும் கனியைக் காட்டி,
தெளிவில்லார்க்கு அறிவைச் சொல்வீர்.
நேர்மாறாக நடப்பது காண்பீர்;
நிறுத்தாவிடில் நீர் நேர்மையைக் கொல்வீர்.
யார் இவன் கூற, எனப் பழிக்காது,
இறையின் வாக்கால் பெருமையை வெல்வீர்!
ஆமென்.

Image may contain: plant, flower, outdoor and nature

தாவீதின் இறைவாக்கு!

தாவீதின் இறைவாக்கு!
நற்செய்தி மாலை: மாற்கு 12:35-37.
“இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, ‘ மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ ஆண்டவர் என் தலைவரிடம், ″ நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் ″ என்று உரைத்தார் ‘ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி? ‘ என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
தாவிதின் மகனாய்ப் பிறப்பவர் எனினும்,
தலைவர் என்றுதான் விளித்தார்.
தாழ்மையில்லா உலகம் எனினும்,
தந்தை அன்பில்தான் அளித்தார்.
பாவியர் மீட்பு அரிதே எனினும்,
பரிந்தவர் குருதிதான் தெளித்தார்.
பகுத்தறிவிற்குப் புரியாதெனினும்,
பணிந்தவர் யாவருந்தான் களித்தார்!
ஆமென்.

No automatic alt text available.

இறையின் சாயல் அன்பே!

இறையின் சாயல் அன்பே!
நற்செய்தி மாலை: மாற்கு 12:32-34.
“அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.”
நற்செய்தி மலர்;
ஒன்றே ஓன்று தெய்வம் ஓன்று.
ஒன்றின்மேலே இல்லை என்று,
அன்றே சொன்னார், அதனை இன்று,
அறியும் அறிவே நமக்கு நன்று.
என்றே உரைக்கும் நம்மில் இன்று,
இறையின் சாயல் அன்பு என்று,
நன்றே சொன்னார் இயேசு அன்று,
நன்மை வழியில் நடந்து சென்று!
ஆமென்.

Image may contain: 1 person, people standing and outdoor

இரண்டு கட்டளைகள்!

இரண்டு கட்டளைகள்!
நற்செய்தி மாலை: மாற்கு 12:28-31.
“அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக” என்பது முதன்மையான கட்டளை. “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.”
நற்செய்தி மலர்:
திரண்டு கொழுத்தத் தீமை வாழ்வில்,
தெய்வக் கட்டளை கேட்க வேண்டும்.
இரண்டு பண்புகள் என்றும் வேண்டும்.
இவற்றின்படிதான் வாழ வேண்டும்.
முரண்டு பிடித்தல் நிறுத்திவிட்டு,
முழு அன்போடு இறையிடம் வேண்டும்.
சுரண்டுபவர்தான் மனிதரென்றாலும்,
சோராதன்பைச் செலுத்த வேண்டும்!
ஆமென்.

Image may contain: 1 person , text