குடியரசு நாள் வாழ்த்து!
தனி வாழ்வில் நேர்மையாய் இரார்,
பொதுவாழ்வில் நேர்மையைத் தரார்!
இனி இதனை விதியாக்கிடுவார்,
இந்நாட்டின் நன்மை நோக்கிடுவார்!
-கெர்சோம் செல்லையா
The Truth Will Make You Free
குடியரசு நாள் வாழ்த்து!
தனி வாழ்வில் நேர்மையாய் இரார்,
பொதுவாழ்வில் நேர்மையைத் தரார்!
இனி இதனை விதியாக்கிடுவார்,
இந்நாட்டின் நன்மை நோக்கிடுவார்!
-கெர்சோம் செல்லையா
நன் தமிழ் நாடு!
சேரர் சோழர் பாண்டியர் நாளில்,
சிறப்பாய் வளர்ந்தது செந்தமிழ்நாடு.
ஈரம் இல்லார் வந்ததன் பின்னர்,
இழிவுபட்டது என் தமிழ்நாடு.
நேரம் இல்லார் தமிழ் பேசாததினால்,
நீங்கள் காண்பது வன் தமிழ்நாடு!
ஆரம் சூடி, உம்மைப் பணிவேன்;
அன்பு நண்பா, நன் தமிழ் நாடு!
-கெர்சோம் செல்லையா.
புழுகவில்லை!
காமராசர் கக்கனைப் பார்த்தும்,
கதர் ஆடைகள் ஒழுகவில்லை;
கழகம் கண்ட பெரியார் முயன்றும்,
கறுப்புச் சட்டைகள் கழுவவில்லை.
ஆமாம், நல்ல கண்ணு இருந்தும்,
அடிமைகள் அவரைத் தழுவவில்லை.
அப்படிப்பட்ட தமிழ் நாட்டிற்கு,
ஆண்டவரே கதி, புழுகவில்லை!
-கெர்சோம் செல்லையா.
இரக்கம் கொண்டவர் இறைவன்!
இறை வாக்கு: லூக்கா 1:59-63.
59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இறைவாழ்வு:
இரக்கம் கொண்டவர் இறைவன் என்று,
யோவான் பெயரில் கண்டோம் அன்று.
உரக்கச் சொல்வோம் நாமும் இன்று,
இறையின் அருளே வாழ்வில் நன்று.
அரக்கத் தன்மை கொண்டவர் கண்டு,
அதுவே சரியெனச் சொல்பவர் உண்டு.
முரடர் மூடர் கதைகள் கொண்டு,
முடிவு செய்வோர், மண்டு, மண்டு!
ஆமென்.
இறைவாக்கு: லூக்கா 1:56-58.
56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
இறைவாழ்வு:
பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்;
பெறாதவள் பெற்றால் பெருமகிழ்வாகும்.
உள்ளத்தின் மகிழ்வு உறவிலும் பரவும்;
உறவுகள் வழியாய் ஊரும் மகிழும்.
வெள்ளத்தின் வலிமை பெற்றிருந்தாலும்,
வேண்டும் இறையருள், பிள்ளை பிறக்கும்.
கள்ளத்தின் வாழ்வும் மலடேயாகும்;
கடவுளில் பிறப்போம், களிப்புண்டாகும்!
ஆமென்.
அடகு வைக்காதீர்!
ஐந்து காசில் உண்மை அற்றோர்
ஐந்தாயிரத்தை எடாரோ?
சொந்த வாழ்வில் நேர்மை அற்றோர்,
சுவைக்கும் பொதுவில் கெடாரோ?
இந்த நாளின் திரைப்படத்தவரால்,
எத்தனை இழிவு காணீரோ?
செந்தமிழ் நாட்டை அடகு வைக்காதீர்;
சிந்திப்பவரே நாணீரோ?
-கெர்சோம் செல்லையா.
வறுமையை ருசித்தவரே வாருங்கள்!
காட்சி காணாக் கண்களினால்,
மாட்சி அறிய இயலாதே!
மீட்சி என்பது தெரியாமல்,
ஆட்சி அமைக்க முயலாதே!
நேற்று வறுமை ருசித்தவரே,
மாற்று வழியைத் தருவாரே!
வேற்று மனிதர் தெரியாரே;
தோற்று போகவே வருவாரே!
-கெர்சோம் செல்லையா.