இணைக்கும் பாலம்!

இணைக்கும் பாலம்!
கிறித்துவின் வாக்கு: மாற்கு 1:8-9.
“அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.”

கிறித்துவில் வாழ்வு:
இணைக்கும் பாலமே பாதிரியாவார்;
இறையுடன் இணைக்க, மாதிரியாவார்.
அணைக்கும் இறையின் பண்பாயிருப்பார்;
அனைவரிடத்திலும் அன்பாயிருப்பார்.
பிணைக்கும் பணியில் பிழைகள் பொறுப்பார்.
பெரியவர் சிறியவர் பிரிவினை வெறுப்பார்.
நினைக்கும் யாவரும் இவரைப் புகழ்வார்;
நேர்வழி விரும்பாதவரே இகழ்வார்!
ஆமென்.

Image may contain: bridge, plant and outdoor

யோகக் கலையும் பிறவகைப் பயிற்சிபோன்று ஒருவகை உடற்பயிற்சியே. உடலைக் கட்டுப்படுத்தமுயல்வதால், ஒருவரால் தன் பொருளையும் ஆவியையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க இயலுமா? இயலாதே! ஒருவன் கிறித்துவுக்குள் வந்தால், அவன் கிறித்து ஆவியின் ஆளுகைக்குள் வருகிறான். இறைவனின் ஆவி இவனது ஆவியைக் கட்டுப்படுத்துகிறது; இவனது பொருளைக் கட்டுப்படுத்துகிறது;இப்படியாய் இவனது உடலையும் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்டவன் எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்ட அமைதிபெற்று மகிழ்கிறான். கீழிருந்து முயல்வதைவிடவும், மேலிருந்து பெறுவதே எப்போதும் பெரிதாம். பயிற்சிகளின் பட்டறிவில்தான் இதை எழுதுகிறேன்.

-கெர்சோம் செல்லையா.

Yoga can be considered as a form of physical exercise, like other exercises. Can our control of body (by yoga or by any other form of exercise) result in controlling our soul and spirit? Never! On the other hand, if we are in Christ, His Spirit reigns on us. This means the Spirit of God controls our spirit and our soul, and thereby our body. The results is, we have peace, that surpasses all our understanding. Getting from above is always greater than seeking from below! This is my experiment with exercises!
– Gershom Chelliah.

வேண்டல் ஒரு நாள்

 
வேண்டல் ஒரு நாள் கூடிவரும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:5-7.
“யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.”
கிறித்துவில் வாழ்வு:
நீண்ட நாளின் விண்ணப்பம்,
நிறைவேறாது இருந்தாலும்,
ஆண்டவரின் நன்மக்கள்,
அண்டிக் கொள்வது அறமாகும்.
வேண்டல் ஒருநாள் கூடிவரும்;
விரும்பும் நன்மை தேடிவரும்.
தோண்டத் தோண்ட அருளூற்று,
தூயோர் வாழ்வில் உறவாகும்!
ஆமென்.

கிறித்துவின் வாக்கும் கிறித்துவில் வாழ்வும்!

கிறித்துவின் வாக்கும் கிறித்துவில் வாழ்வும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:1-4.
“மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.”

கிறித்துவில் வாழ்வு:
எண்ணற்றோர்கள் எழுதி உரைத்த,
இறைவாக்கினையே நானும் தந்தேன்;
கண்ணற்றோனாய் நானுமிருந்தேன்;
கண் திறந்தாரே காட்ட வந்தேன்.
உண்மை இதுவே, நன்மை வழியே.
உணர்த்தினாரே, எழுதுகின்றேன்.
மண்ணும் நாடேன், மாடும் தேடேன்;
மன்னன் இறையே, புகழுகின்றேன்!
ஆமென்.

Image may contain: 1 person

இயேசு வழியில் இன்புறுவீர்!

இயேசு வழியில் இன்புற்றிருப்பீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:19-20.
“இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.”
நற்செய்தி மலர்:
விண்ணைவிட்டு இறைவன் வந்தார்;
விடுதலை வாழ்வை மகனாய்த் தந்தார்.
மண்ணைவிட்டு விண்ணகம் சென்றார்;
மறுபடி இறையாய் சேர்ந்திருக்கின்றார்.
கண்ணைப் பெற்றோர் நம்பி வாரீர்;
கடவுள் அருளால் நன்மை சேரீர்.
எண்ணம் செயலில் அன்பாயிருப்பீர்.
இயேசு வழியில் இன்புற்றிருப்பீர்!
ஆமென்.

(எழுதி வெளியிடுவோர்: கெர்சோம் செல்லையா.
இறையன்பு இல்லம், எண்:24, செயலகக் குடியிருப்பு,
இரட்டை ஏரி, குளத்தூர், சென்னை- 600099.
தொலைத் தொடர்புகள்: 91+ 9444 628 400, 044-2565 5000 & 2565 6000).

No automatic alt text available.

வரலாற்றை மறைப்பவர்கள்!

வரலாற்றை மறப்பவர்கள் மதியற்ற மக்கள்;
வரலாற்றை மறைப்பவர்கள், மாகொடிய மாக்கள்.
அரசாட்சி எனும் பெயரில் அறத்தையும் புதைப்பார்கள்;
அடுத்தத் தலைமுறைக்கு இனி எதை வைப்பார்கள்?
-கெர்சோம் செல்லையா.

இறையின் அன்பை எடுத்துரைப்போம்!

இறையின் அன்பை எடுத்துரைப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:15-18.
” இயேசு அவர்களை நோக்கி, ‘ உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எட்டுத் திக்கிலும் எல்லா இடத்திலும்,
இறையின் அன்பை எடுத்துரைப்போம்.
கெட்டுப் போனோர் மீட்கப்படுவார்;
கிறித்துவின் அருளைக் கொடுத்துரைப்போம்.
திட்டும் மனிதரும் தீமை விடுவார்;
தெய்வ ஆவியில் அடுத்துரைப்போம்.
விட்டுப் போகாதிருக்கும் தெய்வம்
விரும்பா வினையும் விடுத்துரைப்போம்!
ஆமென்.

Image may contain: fire, night and candles

எதையெதையோ நம்பிடுவார்!

எதையெதையோ நம்பிடுவார்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:12-14.
“அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.”
நற்செய்தி மலர்:
எதையெதையோ நம்பிடுவார்;
ஏமாந்தும் விழுந்திடுவார்.
கதை கதையாய்ச் சொன்னவற்றை,
கடவுளெனத் தொழுதிடுவார்.
சிதை நெருப்பு அண்டுமுன்னர்,
சீரறிவு பெறுபவர் யார்?
விதைமணியாய் விழுந்தெழுந்த
விண்ணரசின் பிள்ளைகளார்!
ஆமென்.

Image may contain: plant, tree, outdoor and nature

அன்று மரியாள் கண்டுரைத்தும்….

அன்று மரியாள் கண்டுரைத்தும்….
நற்செய்தி மாலை: மாற்கு 16:9-11.
“வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.”
நற்செய்தி மலர்:
அன்று மரியாள் கண்டுரைக்க,
அடியாரோ அதை நம்பவில்லை.
இன்று நாங்கள் நம்பியுரைக்க,
எதிரி தருவதோ அம்பு வில்லை!
சென்று போன நாட்களின் தவற்றைச்
சீர்செய்தாலோ வம்பு இல்லை.
என்று ஒருவர் நம்பவிலையோ,
அங்கு மெய்யும் அன்புமில்லை!
ஆமென்.

No automatic alt text available.

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!

உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 16:5-8.
“பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள். அவர் அவர்களிடம், ‘ திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ‘ உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் ‘ எனச் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பிறந்தவர் எவரும் இறந்திடுவார்;
பிறவி முடிந்ததும் பறந்திடுவார்.
இறந்தவர் பின்னர் என்னாவார்?
இதற்கு விடையை யார் சொல்வார்?
திறந்து பார்ப்போம் இறைநூலை;
தெய்வ மைந்தன் உயிர்த்தெழுந்தார்.
உறக்கம் போன்றதே நம் இறப்பும்.
ஒருநாள் நமையும் எழுப்பிடுவார்!
ஆமென்.

No automatic alt text available.