படைத்தவர் நம்முடன் வருவது பாரீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:40-41.
“பின் அவர் அவர்களை நோக்கி, ‘ ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ‘ என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ‘ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் அமிழும் சூழல்;
ஆயினும் இயேசுவின் அருள் நம்முள்ளில்.
பாழ் பட்டோம் எனப்பதறாதீர்.
படைத்தவர் நம்முடன் இருப்பது பாரீர்!
வாழ்விழந்தோர் என்றவர் இன்று,
வாழும் உயர்நிலை கண்டு அறிவீர்.
தாழ்விடத்தில் விழுந்த இவனும்,
தாங்கும் இறையால் எழுந்ததைத் தெரிவீர்!
ஆமென்.