நற்செய்தி மாலை: 2:25-26.
Month: January 2015
வரலாற்றுப் பிழை!
சேரனும் பாண்டியும் ஆண்ட அந்நாட்டை,
இவரது வெறியை மாற்றீரோ?
இவரது வெறியை மாற்றீரோ?
வேண்டாம் பழமை!
பழையதும் புதியதும்!
விருந்தின் மகிழ்வே கிறித்தவ வாழ்வு!
நோயுற்றவருக்கே மருத்துவர்!
நோயுற்றவருக்கே மருத்துவர்!
நற்செய்தி மாலை: மாற்கு 2:15-17. “பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ‘ இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ‘ என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ‘ நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
அணியணியாய் மருத்துவர்கள்
ஆயிரம்பேர் வந்தாலும்,
பிணியென்று தெரிந்தால்தான்
பேதையர்கள் திரும்பிடுவார்.
மணியொலியாய் இறைவாக்கு
மன்றங்களில் ஒலித்தாலும்,
பணிவுள்ள நெஞ்சினைத்தான்
படைத்தவர் விரும்பிடுவார்!
ஆமென்.
வாழ்த்துகிறோம்
மெய்த்தமிழர் அனைவரையும்
தை நாளில் வாழ்த்துகிறோம்.
பொய் நீக்கி மெய் காண
புத்தாண்டில் வாழ்த்துகிறோம்!
ஒருவாய் உண்ண ஊரினை விழுங்கும்….
ஒருவாய் உண்ண ஊரினை விழுங்கும்….
நற்செய்தி மாலை: மாற்கு 2:13-14.
“இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ‘ என்னைப் பின்பற்றி வா ‘ என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
ஒருவாய் உண்ண, ஊரினை விழுங்கும்,
உண்மை இல்லா ஊழியரே,
திருவாய் திறந்து தெய்வம் அழைக்க,
துணிவுடன் துறந்தவர் லேவியரே.
வருவாய் குறையும் என்று நினைக்கும்,
வழிக்குள் வராத கிறித்தவரே,
அருளால் பெறாத செல்வம் அழியும்.
அதனை மறப்பவர் பாவியரே!
ஆமென்.
விழுந்துபோக வேண்டாம் நண்பா!
விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
“மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ‘என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘ நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ‘ என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ‘ இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”
நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.
எது பெரிது?
எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
“உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ‘ உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ‘ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்பதா? ‘ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?”
நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும்
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும்
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்
வாழ்வே பெரிது, வா மனிதா!
ஆமென்.