இருபது கடவா அகவை கொண்டும்,

இவரில் இருந்த இறைப் பற்று,

சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,

செய்திச் சுரங்க அருள் ஊற்று.

அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,

அகவையுள்ளோர் இது கற்று,

வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,

வாழும் திரு மறைக் கூற்று!

(1 சாமுவேல் 16-18))

May be an image of 1 person

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

கொல்லும் பலிகள் கொடுப்பது நன்றா?

கீழ்ப்படிந்து நடப்பது நன்றா?

வெல்லும் வீரர் புகழ்தல் நன்றா?

வெறியில்லாத இரக்கம் நன்றா?

சொல்லும் இறையின் வாக்கு நன்றா?

சொந்தமான மடமை நன்றா?

இல்லை வேறு இனிமை இல்லை;

இறையே நமக்கு என்றும் நன்று!

(1 சாமுவேல் 15:22).

May be an illustration of text that says 'Obediance 1 1 SAMUEL 15:22 Sacrifico Sac IS BETTER THAN'

உயர்ந்து நின்ற ஒருவரைத் தேர்ந்து,

உடனடி அரசர் ஆக்குகிறார்.

நயந்து செய்கிற நல்லோர் போன்று,

நடித்து நாள் அவர் போக்குகிறார்.

அயர்ந்து கிடக்கிற இசரயெல்லரை,

அந்த சவுலும் காக்கவில்லை.

ஐயோ, அதுபோல் பலரைக் கண்டோம்.

அவரும் இறை நோக்கவில்லை!

(1 சாமுவேல் 9-31)

May be an image of 2 people

அடுத்த வீட்டையும் அண்டை நாட்டையும்,

அவாப் பெருக்கினில் பார்க்கிறோம்.

எடுத்த எடுப்பிலே,இலாதவை காணவும்,

ஏக்கம் பொறாமை கோர்க்கிறோம்.

தொடுத்து வந்திடும் துயர்கள் தீர்க்கும்,

தெய்வ அரசையோ மறுக்கிறோம்.

கெடுத்து ஆள்வதை அறியாதழியும்,

கீழோர் போற்றியும் சிறுக்கிறோம்!

(1 சாமுவேல் 8:1-22).

May be an image of text that says 'Thep have rejected jectes21e 20e that I should not be kíng over them 1 Samuel 8:7 Knowing Jesus Jesus.com'

மன்னர்கள் இல்லா அன்றைய நாளில்,

மதிப்பில் சிலபேர் சிறந்தனர்.

தன்னிகர் இல்லாத் தலைவர்களாகி

தகுந்த முடிவும் எடுத்தனர்.

என்றிருந்தாலும் இவர்களை உணர்த்த,

இறை வாக்கினரும் பிறந்தனர்.

அன்னாள் மகனாம் சாமுயெலுக்கு,

அவரில் முதலிடம் கொடுத்தனர்!

(1 சாமுவேல்)

May be art of 1 person

அந்நாள் வந்த பஞ்சம் தவிர்க்க

அயல் நாடுற்ற தாயார் பின்,

எந்நாள் ஆயினும் புகழ் தழைக்க,

எழுந்த பெண்ணே ரூதாவார்.

பின்னாள் இவளே தாயாராகி,

பிறக்க வைத்த அரசர்களை,

இந்நாள் கண்டு இறையுமறிவார்,

ஏழ்மை நீக்கும் தூதாவார்!

(ரூத்து 1-4).

May be an image of 1 person and text that says 'Loss.Love,andRedemption and Redemption Loss, RUTH TH TRIUMPH OF LOYALTY AND LOVE'

எப்படி மனிதர் செயல் புரிந்தாரோ,

யார் யாருக்குத் தீங்கிழைத்தாரோ,

அப்படி அவரும் அடைந்தது காட்டும்,

அறிவுத் திருமறை வாசிப்பீரே.

இப்படி நம்மைத் திருத்தியமைக்கும்,

இதுவே வாழ்வு என்றும் உணர்த்தும்,

செப்பிட இயலா ஆசிகள் நிறைந்த,

செயல்வழி நூலிதை நேசிப்பீரே!

(நீதித் தலைவர்கள்: 1:1-7;8:30-9:57)

May be a graphic of 1 person and text that says 'ADONI BEZEK THE KING WHO MUTILATED HIS ENEMIES'

அடுத்த முந்நூற்றைம்பது ஆண்டில்,

அரசர் என்பவர் இல்லா நாளில்,

தடுத்து ஆளும் இறையைப் பிரிந்தார்.

தமக்குச் சரியென்பதும் புரிந்தார்.

கெடுப்பதும் கெடுவதுமாகத் திரிந்தார்;

கேட்டின் வேரும் பாராதிருந்தார்.

இடுக்கணில் மட்டும் இறைவா என்றார்.

இழிநிலைக்கே இப்படிச் சென்றார்!

(நீதித் தலைவர்கள் (21:25)

May be an image of text that says 'In those days there was no king in Israel: every man did that which was right in his own . Judges S0 Judges-21:25 21:25'

Public

நானூறு ஆண்டுகள் ஆயினும்,

நல்லிறை வாக்கு பலித்ததே.

தேனூறு நாட்டை வழங்கினும்,

திருந்தி வாழவும் விளித்ததே.

ஆனாலும் இசரயெல் மறந்ததால்,

யோசுவா எழுதி எழுகிறார்.

தானும் தன் வீட்டார் அனைவரும்,

தாழ் பணியத் தொழுகிறார்!

(யோசுவா 24).

May be an image of text that says '"...choose you this day whom ye will serve... but as for me and my house, we we will serve the LORD."'