உழவர் மீனவர் உழைப்பவர் கேட்டால்,

ஒன்றும் கொடாதவர் இந்நாட்டார்.

கிழவர் சொல்லியா அடிமையை விடுவார்?

கேளா மனிதர் அந்நாட்டார்.

அழகிய கோபுரம் எழுப்பும் நாளில்,

அடிமையை யார் தான் விடுவிப்பார்?

தொழுதிடு நண்பா, தெய்வம் செய்வார்.

தொடரும் துயரில் கெடு வைப்பார்!

(விடுதலைப் பயணம் 5 & 6).

May be an image of 7 people

இருபது இலட்சம் அடிமைகள் வைத்து,

எகிப்திய நாட்டில் தழைக்கிறவர்,

பொருளியல் இழப்பை நன்றாய்ப் புரிந்து,

போக விடுவரோ? சொல்லுங்கள்.

அருமையில் அருமை விடுதலை என்று,

அகவை எண்பதில் அழைக்கிறவர்,

ஒருவர் இருவர் என்பதும் தெரிந்து

உயிர் எடாரோ? சொல்லுங்கள்!

(விடுதலைப் பயணம் 4)

May be an illustration of 1 person

முதலில் தயக்கம் கொண்டிருந்தாலும்,

முடிவுடன் மோசே புறப்பட்டார்.

இதுவரை நடத்திய ஆடுகள் விட்டும்,

இறையின் சொற்படி புறப்பட்டார்.

எது சொன்னாலும் ஏற்க மறுக்கும்,

எகிப்திய அரசிடம் புறப்பட்டார்.

புதுமை என்ன? புரியா இனத்தையும்,

புது இடம் நடத்த, புறப்பட்டார்!

(விடுதலைப் பயணம் 4)

May be an image of 1 person, the Great Sphinx of Giza and text

நாற்பது ஆண்டுகள் நாட்டில் கற்றும்,

நடத்தும் தலைமை கிடைக்காது,

கார் இருள் காட்டில் கற்றுத் தேறும்,

கடவுட் தொண்டரைப் பாருங்கள்.

பார்வோன் நாட்டில் கற்றது வீரம்;

படைத்தோர் பணிக்கது போதாது.

நேர்மை நெஞ்சில் ஈரமும் வேண்டும்.

நிறைக்கும் இறை முன் வாருங்கள்!

May be an image of ‎1 person and ‎text that says '‎Moses oלeל WHY WAS IN THE WILDERNESS for 40 years?‎'‎‎

பன்னிரு பிரிவாய்ப் பரந்து கிடந்த,

பல இலட்சத்து மாந்தரை,

முன் நிலை நின்று, விடுதலை செய்ய,

மோசேயை இறை தெரிகிறார்.

தன் இரு கைகளில் ஆயுதம் சுமந்த,

தவறிப் போன தலைவனை,

விண் விருப்பறிந்து, நீதியைச் செய்ய,

வேகா முள்ளில் எரிகிறார்!

(விடுதலை நூல் 2 & 3)

May be an image of 1 person and fire

இருபது முப்பது இலகாரத்தில்,

இறையின் மக்கள் வளரவே,

அருவருப்பாக எகிப்தியர் கண்டு,

ஆயரை அடிமை ஆக்கினர்.

ஒருவரும் எவ்வித பயன் பெறாமல்,

ஊழியம் செய்து தளரவே,

தருகிற பொருளியல் பேறு கொண்டு,

தம்மினத்தையும் தூக்கினர்!

பிறரை வதைத்து, பெரு மேடெழுப்பி,

பிரமிட் என்பதாய் விளிக்கிறார்.

குறை காணாத பல பேர் எழும்பி,

கோபுர அழகிலும் களிக்கிறார்.

பறை அறிவிக்கும் பற்பல நூலை,

பண்பாடென்றும் தொகுக்கிறார்.

இறையோ பெரு மூச்சை நினைத்து,

ஏழைக்கு வழி வகுக்கிறார்!

May be an image of the Great Sphinx of Giza

இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,

எழுபது என்று சொல்கிறார்.

அப்படி வந்தவர் தான் பெருத்து,

அடிமை நிலைக்குச் செல்கிறார்.

ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,

ஒருங்கே வாங்கி வீழ்கிறார்.

எப்படி இவரை மீட்க இயலும்?

இறையே என்று தாழ்கிறார்!

இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,

எழுபது என்று சொல்கிறார்.

அப்படி வந்தவர் தான் பெருத்து,

அடிமை நிலைக்குச் செல்கிறார்.

ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,

ஒருங்கே வாங்கி வீழ்கிறார்.

எப்படி இவரை மீட்க இயலும்?

இறையே என்று தாழ்கிறா

May be an image of text

பதி மூன்றாண்டுகள் அடிமைப் பட்டவர்,

பார்வோன் கனவால் விடுதலையானார்.

அதி உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்;

அனைவர் உண்ணும் நெடும்பயிரானார்.

எதிரெதிராகக் கெடுத்துக் கெட்டவர்,

இவர் முன் வந்தார், காலில் வீழ்ந்தார்.

மதி நிறை யோசப் மன்னிப்பளித்தார்.

மாந்தர் போற்ற நூலில் வாழ்ந்தார்!

(நைல் ஆற்றின் பாகர் யூசப் கால்வாய்/ “BAHR YUSSEF” யோசேப்பால் கட்டப்பட்டு, எகிப்து நாட்டைச் செழிக்க வைப்பதாக, வரலாறு சொல்கிறது.)

No photo description available.

பன்னிரு ஆண்களை இசரயெல் பெற்றார்,

பாசம் மட்டும் இருவரில் உற்றார்.

சொன்ன கனவால் ஒருவனை இழந்தார்.

சொல் நிறைவேற யோசப் உழன்றார்.

அன்னிய நாட்டில் அடிமை என்றானார்.

ஆயினும் இறையோ உடனுண்டானார்.

இன்னலின் போது பலபேர் கேட்பார்;

இறையோ இரங்கி நம்மை மீட்பார்!

May be an image of text that says 'BUT WHILE JOSEPH WAS THERE IN THE PRISON, THE LORD WAS WITH HIM. Genesis 39:20b-21a'

வாக்கின்படியே வந்தவர் வழியில்,

வரிசையாக இருவர் பிறந்தார்.

நோக்கும் மனிதர் முதல்வர் தெரிவார்.

நொண்டியவரையே இறை தெரிந்தார்.

தீக்குணம் கொண்டு அவர் இருந்தும்,

திருத்தி இசரயெல்லென விளித்தார்.

போக்கிடம் சொந்தம் வேறு பிரிந்தும்,

புதிய நாடும் வாக்களித்தார்.

May be an image of text that says 'GOD'S TO THE NATION OF ISRAEL PROMISES ARE ETERNAL mesabiblestudy.com'