இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!

இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:31-33.

31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அன்றொரு தூதன் உரைத்தது கண்டீர்;
அதன்படியானதும் அறிந்து கொண்டீர்.
என்றபோதிலும் இறைவழி மறந்தீர்;
ஏற்க மறுத்து, எங்கோ பறந்தீர்.
கன்னி மரியின் பற்றை நினைப்பீர்;
காற்பங்காவது பற்றி அணைப்பீர்.
இன்றைக்காவது ஏற்றுக் கொள்வீர்;
இயேசு பிறக்க, இன்பம் அள்வீர்!
ஆமென்.

Image may contain: 1 person, text
 

மரியின் அச்சம்!

மரியின் அச்சம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா1:30.

30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

கிறித்துவில் வாழ்வு:
கன்னி ஒருத்தி கருவுற்றாள் எனில்,
காண்போர் பழிக்கும் காலமது.
அன்னை மரியும் அதனை நினைத்து,
அச்சம் கொள்வதில் தவறேது?
என்றபோதிலும் இறைவிருப்பிற்கு,
ஈந்தளித்தல் காணும்போது,
முன்பு நிற்கத் தகுதியில்லை;
என்றுணர்ந்தேன், உண்மையேயிது!
ஆமென்.

Image may contain: 1 person

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்து!

அரசியல், சமுக வீழ்ச்சிகளால்,
அடிமை ஆனோம் அன்னாளில்.

இரக்கம் இல்லா ஆட்சிகளால்,
ஏற்றமும் காணோம் இன்னாளில்.

முரடர், திருடர் நீக்கிவைத்தால்,
முன்னேறிடுவோம் பின்னாளில்.

உரக்கக் கூறியும் போக்குரைத்தால்,
உமக்கு விடுதலை என்னாளில்?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and close-up

நல்லவரேசு எனது கோனார்!

நல்லவரேசு எனது கோனார்!

உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.

எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.

கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.

நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text and nature

யார் தந்தார் விடுதலை?

யார் தந்தார் விடுதலை?

யார் இவர் என்று தெரியவில்லை;
இவரது எண்ணமும் புரியவில்லை.

நேர்மையாக நாம் நோக்கின்,
நிகழ்ந்தவை உண்மை, வேறில்லை

பார், இதோ விடுதலை என்றவர்கள்,
பசித்தவருக்குத் தரவில்லை.

தேர்தலில் வென்று சென்றவர்கள்,
தொண்டு செய்யவே வரவில்லை!

-கெர்சோம் செல்லையா.

-3:45

524,699 Views

ஆய்வோம் இறைவாக்கை!

எண்ணி ஆய்வோம் இறைவாக்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா:1:29
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
வாக்கின் விளக்கம் புரியாமல்,
வருத்தம் கொள்வோர் நாமென்றால்,
நோக்கிப் பார்ப்போம் மரியாளை,
நொடியில் கலக்கம் நீங்கி விடும்.
ஏக்கம் எதுவும் கொள்ளாமல்,
இறையின் வாக்கை ஆய்ந்திட்டால்,
தாக்கும் வருத்தம் தவிடாகும்;
தருவார் வாழ்த்து, வாங்கி எடும்!
ஆமென்.

No automatic alt text available.