இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!
இறைவாக்கு: லூக்கா 1;26-28.
26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
இறைவாழ்வு:
மறைவழி வாழும் மாண்பு கொண்டோர்,
மாநிலத்தில் இன்று அரிதாகும்.
இறைவனும் இவரில் மகனாய்ப் பிறத்தல்,
எல்லா அரிதிலும் பெரிதாகும்.
குறையுள்ள நம்மில் நிறைவாய் வாழ்ந்து,
கொடுத்து வைத்தவர் மரியாகும்.
அறைந்திடும் ஆணியாகவே சொல்வேன்,
ஆண்டவர் தேர்வே சரியாகும்!
ஆமென்.