உயிராம் இறை!

உயிராம் இறை!

நற்செய்தி: யோவான் 5:21

நல்வழி:


கடலின் அழகு கரையாகும்;

காண விரும்பின் கடப்பரே.

உடலின் அழகு உயிராகும்;

உயிர் இருப்பின் நடப்பரே.

திடமும் நீரும் காற்றாகும்,

தெளியார் இருளில் கிடப்பரே.

தடந்தராமல் உயிர் போகும்,

தட்டியெழுப்புவார் மீட்பரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தந்தை-மைந்தன்!

இறையைக் காட்டும்  இறைமைந்தன்!
நற்செய்தி: யோவான் 5:19-20.  

19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 

நல்வழி: 

பெற்றோர் பார்த்து பிள்ளை கற்பார்.

பெருமை கொண்டு அதனுள் நிற்பார்.

மற்றோர் மதித்து, நன்மை செய்வார்,

மக்களும் உணர, அவரும் உய்வார்.

கற்றோர் இன்று அறவழி மறந்தார்;

காதால் கேளா பிள்ளையும் துறந்தார்.

பற்றோர் எப்படி இறையறிவுறுவார்?

பார்க்கும் ஏசுமகனே தருவார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

மைந்தன் இயேசு!

மைந்தன் இயேசு!

நற்செய்தி: யோவான் 5:17-18. 17.

இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

நல்வழி:

தந்தையென்று இறை அழைத்து,

தனயனாக மொழி உரைத்தார்.

மந்தையாடாய் நமை நினைத்து,

மேய்ப்பனாயும் வழி அமைத்தார்.

சொந்தமாக்கி எடுத்தணைத்து,

சொற்படியே பழி துடைத்தார்.

இந்தயேசு கிறித்துவேதான்,

என்னிலும் விழி திறந்தார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏன் இந்தத் துன்பம்?

ஏன் இந்தத் துன்பம்?


நற்செய்தி: யோவான் 5:14-16.  

நல்வழி:

ஐந்து விண்மீன் அறையெடுத்து,

ஆடிப் பாடிக் குரல் கொடுத்து,

இந்த நாளில் நாம் நடித்தால்,

இறைப்பணி அல்ல, நண்பர்களே.

அந்த நாளில் கிறித்துவிற்கு,

அவரது அடியர் அனைவருக்கு,

வந்த துன்பம் ஏன் எதற்கு?

வாய்மையில் வெல்ல, அன்பர்களே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விளம்பரமற்ற தொண்டு!

விளம்பரமற்ற தொண்டு!

நற்செய்தி: யோவான் 5:11-13.

நல்வழி: 


நன்மைச் செய்த மனிதர் எவரும்,

நன்றிக் கடனை நாடுகையில்,

தன்னை மறைத்துத் தனியே செல்லும் 

தன்னலமற்ற தலைவன் யார்?

இன்னாள் இதனை எண்ணும் எவரும்,

இயேசு பாதை தேடுகையில், 

சொன்னால் வியப்பாகும் வகையில்,

சொரிவாருள்ளில், தாழ்மை பார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

நன்மை மறுக்கும் சட்டம்!

நற்செய்தி: யோவான் 5:10.

நல்வழி:


மாற்றார் செய்யும் நன்மை கண்டு, 

மனதில் புகழ்வார் பலருண்டு.

வேற்றார் என்று வெறுப்பு கொண்டு,

வெறியில் இகழ்வார் சிலருண்டு. 

போற்றார் கூறும் சட்டம் கண்டு,

பொழியாதிருப்பதில் தவறுண்டு.

ஆற்றார் என்ற பழிச் சொல் கொண்டு, 

அழிய மறுப்பார் எவருண்டு?


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

பற்றால் நடப்போம்!

பற்றால் நடப்போம்!
நற்செய்தி: யோவான் 5:7-9.


7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.


நல்வழி:


எழுந்து இருக்க இயலான் கண்டு,

இறைமகன் என்ன கூறினார்?

அழுக்கு படுக்கை எடுத்துக் கொண்டு,

அவனிடம் நடக்கக் கூறினார்.

விழுந்து கிடக்கும் நம்மைக் கண்டு,

விண்மகன் என்ன கூறுவார்?

தொழுகிற நெஞ்சுள் பற்று கொண்டு,

துன்பம் கடக்கக் கூறுவார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

இந்தியா!

101-ஆம் நாடு!

நூற்று நாற்பது கோடிகள் என்று,

நுண்மதி யாளர் வாழ்நாட்டில், 

தேற்று வாருடன் உணவும் அற்று,

திரிகிற இந்தியர்,  ஏன் நண்பா?

போற்றுகின்ற  பொருளியலறிவு

புதைந்திருக்கும் வளநாட்டில்,

மாற்று ஆடையே இல்லாருக்கு,

மடை மாறுமா, என் நண்பா?

-கெர்சோம் செல்லையா.

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு சரி்ந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர்.உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும், சேர்ந்து தயாரித்த அறிக்கையில், இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.இந்தியாவை விட மோசமாக 15 நாடுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா(102), ஆப்கானிஸ்தான்(103), நைஜிரியா(103) காங்கோ(105), மொசாம்பிக்(106),சியா லியோன்(106), தைமூர் லெஸ்டி(108), ஹெய்தி(109),லைபீரியா(110),மடகாஸ்கர்(111), காங்கோ ஜனநாயகக் குடியரசு(112), சாட்(113),மத்திய ஆப்பிரிக்ககுடியரசு(114),ஏமன்(115), சோமாலியா(116) நாடுகள் உள்ளன.)

-தமிழ் இந்து

விரும்புகிறாயா?

நல்வழி:


ஏன் இக்கேள்வி எழுந்தது என்று,

எண்ணிப் பார்ப்பார் யாரிங்கே?


வான் முட்டறிவு வளர்ப்பாரின்று,


வழங்கும் பதிலும் பாரிங்கே. 

யான் பெறு நோய்கள் என் விதியென்று, 

எழும்பா மனிதரின் ஊரிங்கே. 

மான் கால் போன்று ஓட விரும்பு;

மனநோய் ஒழியும், கூறிங்கே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தூதன் வருவான்!

தூதன் வருவான்!


நற்செய்தி: யோவான் 5:1-4. 

நல்வழி: 


எவ்வடிவெடுத்து, தூதன் வருவான், 

என்றுரைப்பாரும் இன்றில்லை.

அவ்வடிவுரைக்க, அறியேனெனினும்,

அதை நம்பாதவன் என்றில்லை.

செவ்வடிவெடுக்கும் தூதர் கதையில், 

சேர்க்கும் கற்பனை ஒன்றில்லை.

இவ்வடிப்பாடல் எழுதும் உரையில்,

ஏற்படும் ஐயம் நன்றில்லை! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.