Month: March 2018
கற்றோர் அறிஞர் இருக்கையிலே!
கற்றோர் அறிஞர் இருக்கையிலே!
இறைவாக்கு: லூக்கா 1:8-9.
8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இறைவாழ்வு:
கற்றோர் அறிஞர் இருக்கையிலே,
கல்லா மேய்ப்பருக்கேன் உரைத்தார்?
மற்றோர் அறியச் சொல்பவர்க்கே,
மகிழ்ச்சியின் செய்தியை முதலுரைத்தார்?
பெற்றேன் மீட்பு என்பவரே,
பிறரின் மீட்பிற்குரைத்தீரா?
சற்றே நின்று நிலையுணர்ந்து,
சான்றாய் மகிழ்வைப் பகிர்வீரா?
ஆமென்.
எத்தகைய வடிவில் இறை வருவார்?
மண்ணரசு ஆணை மதிப்பவர் யார்?
அரசு ஆணையை மதிப்பவர் யார்?
இறைவாக்கு: லூக்கா 2:1-5.
1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2 சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
இறைவாழ்வு:
கண்மணி மனைவி கருவுற்றிருந்தும்,
கடக்கும் பாதை உருவற்றிருந்தும்,
எண்பது கற்கள் தொலைவு இருந்தும்,
யோசேப்படியார் கீழ்ப்படிந்தார்.
விண்வெளிக் கோள அறிவு இருந்தும்,
விரைந்து செல்லும் வசதி இருந்தும்,
மண்ணரசாணை தெரிந்திருந்தும்,
மாக்கள் இன்று கீழ்ப்படியார்!
ஆமென்.
அறியவேண்டிய ஆன்மிகம்!
அறியவேண்டிய ஆன்மிகம்!
இறைவாக்கு: லூக்கா 1:80.
80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
இறைவாழ்வு:
உண்மை உரைப்பதும், ஒழுக்கத்தை நிறைப்பதும்,
ஓரிறை காட்டும் தெய்வீகம்.
நன்மை புரிவதும், நன்றியைச் சொரிவதும்,
நாம் கற்க வேண்டிய ஆன்மிகம்.
பன்மை மதிப்பதும் பகைமையை மிதிப்பதும்,
படைத்தவர் பொழியும் அருள்மேகம்.
அண்மையில் நிற்கும் மனிதனை வெறுக்கும்
ஆன்மீகங்கள் பொய்யாகும்!
ஆமென்.
கைகள் குவிக்கின்றோம்!
கைகள் குவிக்கின்றோம்!
காட்டுத் தீயில் மாட்டிக்கொண்ட
காளையர் கன்னியர் மாணவரே,
ஏட்டுச் சுரைக்காய் என்றாகாது,
எட்டா மலைமேல் போனவரே.
மீட்டுக் கொள்ள வழியறியாது,
மிரண்டு கீழே தவிக்கின்றோம்;
ஆட்டுவிக்கும் ஆண்டவர் காப்பார்;
அனைவரும் கைகள் குவிக்கின்றோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஆதவனாலே ஒளி பெறுவார்!
ஆதவனாலே ஒளி பெறுவார்!
இறை வாக்கு: லூக்கா 1:78-79.
78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
இறைவாழ்வு:
பொருளைத் தேடி போனோர் இன்று,
பொய்யிருள் மூட அமர்ந்துள்ளார்.
திரு திருவென்று விழித்தும்கூடத்
தெரியா இருட்டில் அமிழ்ந்துள்ளார்.
ஒருவர் சென்று உதவி செய்தால்,
உண்மை அறிய வெளி வருவார்.
அருளின் இறையே, அன்பில் பாரும்;
ஆதவன் உம்மால் ஒளி பெறுவார்!
ஆமென்.
பொத்தானைப் போடத் தெரியாதார்….
பொத்தானைப் போடத் தெரியாதவர்…..
சட்டை பொத்தானைச்
சரியாகப் போட்டறியார்,
திட்டம் பல தீட்டித்
தீர்ப்பாரோ நம் கேட்டை?
மொட்டை அடிப்பதற்கே
முழுக் கயவர் வருகின்றார்;
கொட்டை விழுங்கியிடம்
கொடுக்காதீர் தமிழ் நாட்டை!
-கெர்சோம் செல்லையா.
அறுப்பவரை நம்பும் ஆடே!
அறுப்பவரை நம்பும் ஆடே!
ஆயனை நம்பா ஆடே.
அறுப்பவன் பின் சென்றாயே!
நேய நற்பாதை அழைத்தும்,
நின் போக்கிலே விழுந்தாயே!
தீயவர் வாயின் விருந்தே,
திரும்பி வா, இல்லை தொலைந்தே
போயவர் எச்சிலைப் பார்த்தே,
பொய்மையை விட்டிடுவாயே!
-கெர்சோம் செல்லையா.