நல்லறிவு!

நல்லறிவு!
நற்செய்தி:  யோவான் 7:14-15.

நல்வழி:


கல்லூரி பள்ளி செல்லார் கண்டு,

கல்லார் என்று சொல்லாதீர். 
பொல்லா வறுமை ஒளிந்துகொண்டு,

புரியும் தவற்றில் நில்லாதீர். 

பல்வகை அறிவு நம்மில் உண்டு;

பயன்படுத்தாமல் செல்லாதீர்.

நல்லதை எண்ணி வாழ்தல் தொண்டு;

நல்லறிவிதனைக் கொல்லாதீர்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

புவியோர் சொன்னால்!

புவியோர் சொன்னால்…….

நற்செய்தி: யோவான் 7:12.


12. ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.

13. ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.

நல்வழி:


பொல்லான் என்று புவியோர் சொன்னால்,
பொல்லானாகிக் கெடுவேனோ?
நல்லான் என்று நால்வர் கண்டால்,
நல்லவனாகியும் விடுவேனோ?
இல்லாதவரை ஏய்ப்போர் நோக்கில்,
இவைகள் பெருமை ஆகலாம்.
எல்லாமறிந்த இறையின் வாக்கில்,
இழிவுச் சிறுமை நோகலாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யோவான் 7:12-13.

நல்வழி:

பொல்லான் என்று புவியோர் சொன்னால்,

பொல்லானாகிக் கெடுவேனோ?

நல்லான் என்று நால்வர் கண்டால்,

நல்லவனாகியும் விடுவேனோ?

இல்லாதவரை ஏய்ப்போர் நோக்கில்,

இவைகள் பெருமை ஆகலாம். 

எல்லாமறிந்த இறையின் வாக்கில்,


இழிவுச் சிறுமை நோகலாம்!

 
ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

தேடு!

இயேசுவைத் தேடுகிறார்!நற்செய்தி; யோவான் 7:9-11.

9. இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
10. அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
11. பண்டிகையிலே யூதர்கள் அவரைத்தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.  


நல்வழி:
தேடும் நோக்கம் எதுவென அறிவோம்.

 தெய்வம் நெஞ்சைப் பார்க்கிறார்.

வாடும் நினைவை அவரிடம் எறிவோம்.

வறியோர் பேற்றைச் சேர்க்கிறார். 

நாடும் விருப்பம் நன்மையில் முடியும்;

நல்லவர் இயேசு ஆள்கிறார். 

கூடும் என்று பற்றுடன் பிடியும்.

கிறித்து இல்லார் மாள்கிறார்! 

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

பகை!

பகை வளர்க்கிறார்!

நற்செய்தி : யோவான் 7:6-8.  

நல்வழி:


நன்மை தீமை அறியார்தான், 

நாட்டில் பெருத்து இருக்கிறார். 

பின்னல் வேலை சூதைத்தான்,

பேரறிவாக்கிப் பெருக்கிறார்.

பன்மை மாந்தர் அதனால்தான்,

பகை வளர்த்து வெறுக்கிறார். 

தன்னை ஆயும் மனிதர்தான்,

தவறு விட்டுச் சிறக்கிறார்!


ஆமென். 


-கெரசோம் செல்லையா. 

கிறித்து உயிர்ப்பு வாழ்த்துகள்!

கிறித்து உயிர்ப்பு வாழ்த்துகள்!
பிறப்பின் செய்தி கேட்டோர் சொன்னார்;
பிள்ளை இயேசு அதிசயம்.
சிறப்பில் வாழ்ந்து, அவரும் செய்தார்,
செய்ய இயலா அதிசயம்.
இறப்பின் காட்சி கண்டோர் சொன்னார்;
இறைதரு வாழ்வின் அதிசயம்.
திறக்கும் கல்லைச் சொல்லச் செய்தார்,
தெய்வ மகன் ஓர் அதிசயம்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.