ஒப்புக்கொடுத்தல்!
இறைவாக்கு: லூக்கா 1:22-24.
22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
இறைவாழ்வு:
உடல் பொருள் ஆன்மா உயிரைக் கொடுக்கும்,
கடவுளை வணங்கக் கற்புடன் வாரீர்.
மடை திறந்தாற்போல், மாண்புகள் பெருகும்;
தடையும் இல்லை; இறையிடம் சேரீர்.
இடை வாழ்நாளில் இறைவன் அளிக்கும்,
இனிய செல்வம் குழந்தை பாரீர்.
குடை நிழலாகக் குடும்பம் காக்கும்,
கடவுட் கையில் அதனைத் தாரீர்.
ஆமென்.