உப்பும் நாமும்!

உப்பாயிருப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:34-35.

34  உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

35  அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

உப்பின் ருசியை உணவில் கலக்க, 

உண்பவர் வாயில் தேன் ஊறும்.

அப்புறம் உண்பேன் என்பவர்கூட,

அன்பாய்க் கெஞ்சும் நிலை பாரும்.

சப்பென உணவு சுவையற்றிருந்தால்,

சாப்பிடும் வாய்கள் குறை கூறும்.

குப்பையென்று கொட்டாதிருக்க,

கொஞ்சம் உப்பாகவே மாறும்!

ஆமென். 

தன்னலம் வெறுத்தல்!

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

என்னை அளக்க, எனக்கு உதவும்,

என்று ஒருவன் முன்வந்தால்,

தன்னை அறியும், தன் திறன் புரியும்,

தன்மையைக் கடவுள் தந்திடுவார்.

முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,

முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,

இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;

எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!

ஆமென்.

தொடங்குவார் பலபேர்….

தொடங்கும் பலர் முடிப்பதில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:28-30.

28  உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

29  அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:

30  இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?

கிறித்துவில் வாழ்வு:

தொடங்கிய பலபேர் முடிப்பதில்லை;

தொடர விரும்பியும் முடிவதில்லை.

கிடங்குகள் நிறையப் பொருளிருந்தும்,

கிறித்து இலாததால், படியவில்லை.

முடங்கிட விரும்பா கிறித்தவரோ,

முதலில் இறைவன் முடிவறிவார்.

அடங்கிய நெஞ்சு அமைந்தவராய்,

ஆண்டவர் முடிக்க, அடிநடப்பார்!

ஆமென்.

அனைவர்க்குதவுதல்!

இங்குள்ள உறவுகள் சிலநாள்தானே!கிறித்துவின் வாக்கு: லூக்கா14:25-27.

25  பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:

26  யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

27  தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

இங்குள்ள உறவுகள் சில நாள்தானே;

இவர்களைக் காப்பதும் இறைவன்தானே.

எங்குமெதிலும் உறவினைத்தானே,

ஏந்திப் பிடித்தல், குற்றந்தானே.

பங்கங்கலவா ஊழியமாமே;

பாரினில் கிறித்து கொடுத்தாராமே.

அங்கமென்று அவருடன் நாமே,

அனைவர்க்குதவல் ஏற்றதாமே!

ஆமென்.

அழைக்கப்பட்டோர்!

அழைக்கப்பட்டோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:21-24.

21  அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.

22  ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.

23  அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;

24  அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.

கிறித்துவில் வாழ்வு:

அழைக்கப்பட்ட இனம் அன்று,

ஆண்டவர் விருந்தை ஏற்காது,

பிழைப்பே வாழ்வு என்றதனால்,

பிறர்முன் அழிந்தது, அறிவீரே.

உழைப்பை நம்பும் இனமின்று,

ஒழுகும் அருளை ஏற்காது,

தழைக்கத் தவறும் செய்வதனால்,

தாழ்வடைவது, தெரிவீரே!

ஆமென்.

சிற்றின்பம்!

சிற்றின்பத்தால் சிறுமதி!கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:20.
20 வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்
கிறித்துவில் வாழ்வு:
போருக்கு வீரர் போகும் நாளில்,

புதுமணமானோர் விலக்கடைந்தார்.


பாருக்கு அப்படி விதியிருந்தாலும்,

பற்றுடன் சென்றோர் பலரிருந்தார்.


சீருக்கு உயர்ந்த விருந்து என்றால்,

சீக்கிரமாகவே, கலந்திடுவார்.


யாருக்கு வேண்டும் என்றுகேட்டால்,

யாவுமிழந்து அலைந்திடுவார்!


ஆமென்.

சோம்பேறி!

சோதிக்கும் காலமும் நேரமும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:19.


19  வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:

சோதித்துப் பாரா மாட்டை வாங்கும்

சோம்பேறி ஒருவன் சொல்வானாம்.

பாதிப்பு உண்டோ என்று பார்க்க,

பகலல்ல, இரவிலே  செல்வானாம்.

நீதிக்கருத்தினை ஏற்க மறுப்பவர்,

நேரமுன் பொய்யே சொல்வாராம்.

ஆதிக்க நாட்கள் அடங்கும்போது,

ஐயோ, என்று செல்வாராம்!

ஆமென்.

சாக்குப் போக்கு!

சாக்குப் போக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:18.
18  அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.  

கிறித்துவில் வாழ்வு:

வாங்கு முன்னர் பாராது

வயலை விலைக்குக் கொண்டாராம்;

தூங்குவதையும் கைவிட்டுத்

தோண்டச் செல்வேன் என்பாராம்.

தாங்குகின்ற அடித்தளமும்,

தவறும் பொய்யால் சாய்ந்திடுதே.

ஏங்கு முன்னர் வந்திடுவீர்;

இறையோன் மெய்யை ஆய்ந்திடவே!

ஆமென்.

வாழ்வாம் விருந்து!

வாழ்வெனும் விருந்து!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:15-17.

15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.

கிறித்துவில் வாழ்வு:

திருந்துகின்ற வாழ்வில் இன்று,

தேவையற்றத் திருத்தங்கள்.

மருந்து என்று அவையும் தந்து,

மாற்ற முயல்வார் வருத்தங்கள்.

குருசு சுமக்கும் அடியவருக்கு,

கிறித்தவ வாழ்வோ மகிழ்வாகும்.

விருந்து போன்று அதைப்புசித்து,

விருப்பம் செய்தால் புகழாகும்!

ஆமென்.

விருந்து!

யாருக்களிக்கிறோம் விருந்து?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:12-14.


12  அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.13  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.14  அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
யாரும் கொடாத விருந்தையா;
இயேசு சொல்வது கேளையா.
வாரும், என நாம் அழைப்பவர்கள்,
வறுமையில் வாடும் ஏழையா?
ஊரும் உலகும் மகிழுகையில்,
உண்ணாதுறங்குவார் உண்டையா.
தீரும் அவரது பசியையா,
தெய்வ அன்பு கொண்டையா!
ஆமென்.