குற்றமற்றவரை அடிப்பது!

குற்றமற்றவரை அடித்தல்!

இறை மொழி: யோவான் 19:1-4.

1. அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.

2. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:

3. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

4. பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.

இறை வழி:

குற்றமற்றவர் என்பதை அறிந்தும்,

கொடுமைப்படுத்தி அடிப்பதா?

உற்ற உறவில் ஒருவர் பட்டால்,

ஊரைத் திரட்டி துடிப்பதா?

பெற்ற பதவி துயர் தரத்தானா?

பிறருக்குரிமை இல்லையா?

சற்று நேரம் சமநிலை மறந்தோர்,

சாய்ந்த கதையும் சொல்லவா?

ஆமென்.

May be a doodle

யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?

யாரைத் தேர்வு செய்கிறோம்?

இறை மொழி: யோவான் 18:39-40.

39. பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

இறை வழி:

திருடரும் தூயரும் தேர்வில் நின்றால்,

திருடரே வெல்கிறார்; காணுகிறோம்.

அறிஞரும் மடையரும் போட்டியிட்டால்,

அறிஞர் தோற்கிறார்; நாணுகிறோம்.

உருப்பட மாட்டா உலகோர் வென்றால்,

ஊர்தான் அழியும்; கோணுகிறோம்.

இறையறிவில்லா நிலைமை இதுதான்;

எனவே, இயேசுவைப் பூணுகிறோம்!

ஆமென்.

May be an image of 1 person and text

உண்மை!

உண்மை என்றால் என்ன?

இறை மொழி: யோவான் 18: 38.

38. அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

இறை வழி:

அறிய விரும்பும் குழந்தையைப் போன்று,

ஆளுநர் பிலாத்து கேட்டாலும்,

தெரிய முயன்றிட வில்லை என்று,

தெய்வ நூல் சொல்கிறது.

பெரிய பதவியைப் பெற்றவர் இன்று,

பேர் புகழ்ச்சி தொட்டாலும்,

வறிய மனிதர் மெய்யே நன்று;

வாய்மை தான் வெல்கிறது!

ஆமென்.

No photo description available.

உண்மையின் அரசர்!

உண்மை!

இறை மொழி: யோவான் 18:37.

37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

இறை வழி:

இங்கே பலரிடம் தேடிப் பார்த்தேன்;

இல்லாதிருப்பது உண்மையே.

எங்கே இருக்கும் ஓடிப் பார்த்தேன்;

யாவும் இங்கு பொய்மையே.

மங்கும் கண்ணை மூடிப் பார்த்தேன்;

மனதில் வந்தார் ஒருவரே.

அங்கே உண்மை, கோடி பார்த்தேன்.

அவர்தான் இயேசு அரசரே!

ஆமென்.

May be an image of chess and text that says 'The King of Truth -John 18:37 NLT- heartlight.org'

புவி அரசரில்லை!

புவியரசு இல்லை!

இறை மொழி: யோவான் 18: 33-36.

33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.

34. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

35. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.

36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

இறை வழி:

பாண்டிய, சோழ, சேரர் போன்று,

பாரினில் அரசையும் தரவில்லை.

தோண்டிய செல்வம் குவித்து நின்று,

துரை போல் ஆளவும் வரவில்லை.

வேண்டிய மனிதர் விடுதலைக்கென்று,

விண்விட்டு இயேசு புவி வந்தார்.

தாண்டிய போதும் பொறுப்பார் இன்று;

தரணிக்கு மாதிரி அவர் தந்தார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Pilate asked Him, Are You the King of the Jews? John 18:33'

குற்றச்சாட்டு மாறுவதேன்?

குற்றச்சாட்டு மாறுவதேன்?

இறை மொழி: யோவான் 18: 29-32.

29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.

30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

31. அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.

32. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.

இறை வழி:

இறைப்பழி சுமத்தி இயேசுவைக் கொல்ல

இவர்கள் முயன்று எழுந்தாலும்,

அறையும் படிக்குத் தீர்ப்பைச் சொல்ல

அது போதாதென அறிவார்கள்.

விரைவில் அழிவு வருவதைக் காட்டும்,

வியத்தகு கண்கள் இழந்தாரும்,

அரசைக் கவிழ்க்க ஆட்களைக் கூட்டும்

அநீதிப் பழிதான் தெரிவார்கள்!

ஆமென்.

May be an image of 6 people and text that says 'GoodSalt.com Used with permission.'

எது தீட்டு?

தீட்டு!

இறை மொழி: யோவான் 18:28.

28. அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.

இறை வழி:

கொல்லத் துடிப்பதே தீட்டு;

கொடுமை செய்தலே தீட்டு.

வெல்லும் பொய்யே தீட்டு;

விளையும் தீங்கும் தீட்டு.

சொல்லில் உண்டு தீட்டு;

சொல்பவர் நெஞ்சே தீட்டு.

பல்வகை கண்டேன் தீட்டு,

பாடும் நானே தீட்டு!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Not Wanting to Be Defiled! -John 18:28-32 NLT-'

மறுத்தலும், பொறுத்தலும்!

மறுத்தலும் பொறுத்தலும்!

இறை மொழி: யோவான் 18:24-27.

24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

25. சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

26. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.

27. அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று.

இறை வழி:

முன்னாள் இயேசு சொன்னபடியே

மும்முறை பேதுரு மறுத்தார்.

அந்நாள் அதனை அறிந்த இயேசு,

அன்பில் அவரைப் பொறுத்தார்.

இன்னாள் இதுபோல் ஒருவரிருந்தால்,

யார்தான் அவரைச் சேர்ப்பார்?

பொன்னாய் மாறும் நிலை எந்நாளோ?

பொறுப்பீர், இறை ஏற்பார்!

ஆமென்.

May be an image of bird

தவறுணர்த்தும் பதில்!

தவறுணர்த்தும் பதில்!

இறை மொழி: யோவான் 18:21-23.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.

23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.

இறை வழி:

ஏது எதுவும் இல்லாதிருந்தும்,

ஏன் காவலர் அடித்தார்?

தீது இது; தெரியா மனிதர்,

தீமையைத்தான் பிடித்தார்.

வாது செய்யும் நோக்குடையார்,

வரிந்து கட்டத் துடிப்பார்.

தூது என்னும் இறைமகனோ,

தவறுணர்த்திக் கொடுப்பார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus answered him, Iflhave spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me? John 18:23 KJV'

ஒளிவு மறைவில்லை!

ஒளிவு மறைவில்லை!

இறை மொழி: யோவான் 18: 19-21.

19. பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

20. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.

21. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.

இறை வழி:

தெளிவு தேடும் என் நாட்டாரே,

தெய்வ வாக்கு கேளுங்கள்.

ஒளிவு மறைவு ஒன்றும் இல்லை;

உளம் திறந்து கேளுங்கள்.

பொழிவு நாடும் என் வீட்டாரே,

பொய்மை விட்டு வாழுங்கள்.

அழிவு கண்டு அழுபவர் உண்டு,

அன்பில் மீட்டு வாழுங்கள்!

ஆமென்.

May be an image of text that says 'There is no hidden agenda in my life. I want a good life with good deeds. -Venkatesh SR SR Your uote.in'