செப்படி வித்தை!

செப்படி வித்தை!
நற்செய்தி: யோவான் 7: 31.

நல்வழி:


செப்படி வித்தை செய்வோர் என்றால்,

செல்வார் திரண்டு பெருங்கூட்டம்.

எப்படி வாழ்தல் நலமென்றுரைத்தால்,

இவர்கள் கலைவார் குரங்காட்டம். 

இப்படி நம்மவர் இருப்பதனால்தான்,

இல்லை அவையில் இறையூட்டம். 

சொற்படி வாழ ஒப்புக்கொடுப்போம்.

சிலுவைப் பாதையே, நம் ஓட்டம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 7:30.

வேளை வரவில்லை!

நல்வழி:


எத்தனையோ பேர் முயன்றிருந்தாலும்,

இயேசுவின் வேளை வரவில்லை. 

அத்தனைத் துன்பம் அடைந்திருந்தாலும்,

ஆண்டவரும் பிடி தரவில்லை. 

பித்தராய் நம்மைப் பார்த்திருந்தாலும்,

பிசாசின் வேலை எளிதில்லை. 

இத்தனைக் கூறியும் ஏனினி அச்சம்?

இயேசு தருகிறார் தெளிவுநிலை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

இயேசுவும் நாமும்!

இயேசுவும் நாமும்!
நற்செய்தி: யோவான் 7:27-29.

நல்வழி:


தந்தை மகனாய் இயேசு வந்தார்;

தன் விருப்பில் வரவில்லை. 

வந்தார் தன்னை முழுதும் தந்தார். 

வைதும், தீது தரவில்லை. 

விந்தை உறவாய் நாமும் வந்தோம்;

விண் விருப்பில் வரவு இல்லை.

எந்தக் கணக்கில் நன்மை தந்தோம்?


எண்ண நமக்கும் தரவு இல்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கேட்போம் கிறித்துவின் அறிவு!

கேட்போம் கிறித்துவின் அறிவு!

நற்செய்தி: யோவான்: 7:25-26.25.

அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்?26. இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?

நல்வழி:

கேட்டவர் வியக்கப் பதில் உரைக்கும்,

கிறித்துவின் அறிவு கேட்டிடுவோம்.

நாட்டவர் கொண்ட ஐயம் போக்கும்,

நல்லுரை கூறவும் கேட்டிடுவோம்.

ஏட்டினில் கற்கும் அறிவுகள் யாவும்,

யாவரும் விளங்கக் கேட்டிடுவோம்.

பாட்டினைப் பாடிச் செல்லா வண்ணம்,

பண்பு வளரவும் கேட்டிடுவோம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யோவான் 7:21-24.

நல்வழி!

முகத்தைப் பார்த்து முடிவைக் கூறும், 

மூடர் பழக்கம் முடித்திடுவோம். 

நகத்தைக் காட்டி விரல் என்றெழுதும்,

நடைமுறையினையும் பொடித்திடுவோம்.

இகத்தில் இல்லா நேர்மை அருளும், 

ஈசன் வாக்கு படித்திடுவோம்.

அகத்தின் அழுக்கு, கரைதல் காணும்; 

ஆண்டவரை நாம் பிடித்திடுவோம்.  

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.     

வாய் மூடல் நன்று!

  1. யோவான் 7:20.

நல்வழி:


நம்மைத் திட்டும் கூட்டம் முன்பு,

நம்பதில் என்ன சொல்கிறோம்? 

எம்மால் தாங்க இயலாதென்று, 

இரட்டிப்பாகச் சொல்கிறோம்.

இம்மாதிரியில் வீழ்ச்சி கண்டு.


இனிமேல் என்ன சொல்கிறோம்?

தம்வாய் மூடல் மேன்மையென்று 

தாழ்வில் உயரச் சொல்கிறோம்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

சட்டம்!

சட்டம்!


நற்செய்தி: யோவான் 7;19.

நல்வழி:


நேர்மையான வாழ்க்கை வாழ,

நிறைவேற்றும் ஒரு சட்டம்.

கூர்மையான வாளாய் மாறி, 

கொன்றால் பெரு நட்டம். 

யார் எவரை அழிப்பதென்ற,

இழிஞர் போடுந் திட்டம்,

பார் அளந்த இறையின் முன்பு,

பறக்க இயலா பட்டம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

தற்புகழ்ச்சி!

தற்புகழ்ச்சி !


நற்செய்தி: யோவான்: 7:18.

நல்வழி:


அனுப்பப்படுகிற தூதுவர்கள்,


அனுப்பும் அரசைப் புகழாமல்,

இனிக்கப் பேசி, தம் பெயரை 

ஏற்றிப் போற்றினும் குற்றம்.

திணிக்கப்படுகிற பொய்யுரைகள்,

தீமை தருமென உணராமல்,

மினுக்கப்பட்ட பொன்னணியாய்,

மேலே சாற்றினும் குற்றம்!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.   

Conversion!

CONVERSION!

I, Gershom Chelliah, was a non-believer for more than a decade, when I was young and immature. I used to ask a question to my father, Thiru. K. Chelliah, an impeccable example of honesty, why he had converted to Christianity. The answer I got then was unsatisfactory as I wanted it to be. But when the day of the Lord came into my life, all my doubts were cleared and I realized why I should be a disciple of Christ. On that September night of sadness in 1978, I lost everything, except that Holy Book of King James Version, gifted to me by my father in my teenage. The book that I hated to the core then, became the one and only source of wisdom and solution for my problems.

This Holy Bible teaches me that there is only ONE TRUE GOD, the maker of heaven and earth. He is called in many names, in many tongues, Yet He is One. This God is the God of love, as well as the God of holiness. He is impartial and He treats all of us equally. This is because we are His children, though we differ in our colours, creeds, cultures etc. This God of love and holiness wants His children to love Him and to love one another by means of a holy and righteous life.

But man in his lack of knowledge and deletion of love, deviates from the path of God to bring forth deception, discrimination and division among his own brethren. These are all signs of decay and destruction, though man considers them as his skills of mental caliber. His greed for power and prosperity is fueled by his hatred and hypocrisy. The result is, violence from small scale to large scales. Unless this man of hatred and violence changes his mentality, he is unfit to call himself a Man. He must come out of his darkness to see the light of goodness. He needs a migration, a mighty relocation, from the realm of hatred into the kingdom of love.

How is this possible? Can a man change himself from sinning to sanity? It is impossible for a man to change himself and also impossible for him to convert others! Then, who can do this miracle? God, and God alone can do this wonder, called conversion! God in His love and compassion, gives us His grace and salvation through His Son Christ Jesus. He forgives our commissions and forgets our omissions, by His expiation on the cross of Calvary. Here, the man does nothing, except his concurrence in faith and his commitment to lead a life of love and righteousness. All these changes within a man are wrought not by man, but by the work of the Holy Spirit. A man of hatred and crookedness is changed into a man of love and righteousness. A man of selfishness is turned into a man of service and sacrifice.

How many of us wish to be changed like this? How many of us are changed like this? How many of us are converted by the power of the Holy Spirit? When we crave for this conversion of heart and soul for the betterment of self and society, we hear many ill tidings of irresponsible religious conversions purely based on numerical notions. That’s not the will of God or the way of Christ. They are nothing but, change of religion or otherwise, change of one’s cage! There is no use of showing a huge crowd of unrepentant and unredeemed souls as Christians in the Church records or the census registers.

When I was in the Arabian Gulf, a gentle man from Tamil Nadu asked me once to arrange for his Baptism. I gave him a Bible and asked him to read it to know Christ and His sacrifice. He reluctantly took the Bible, but refused to know the Truth. Later on he told me that he had gone and asked another Catholic Priest to convert him. Even this Roman Padre refused to enroll him in his church without seeing any trace of an inner change! This is the way many churches function elsewhere. An unchanged man and an unwilling man are of no use for the Kingdom of Christ!

My dear Brothers and Sisters, Let us not labour in vain in conversion of religion or counting the number of members in the congregation. The need of the hour is, we follow Christ in all walks of our lives. THAT’S THE REAL CONVERSION FROM WICKEDNESS TO HOLYNESS AND THE CONVERSION FROM HATRED TO LOVE, THE LIFE AND BREATH OF OUR SOUL!

-GERSHOM CHELLIAH.

இறைவாக்கு!

இறை வாக்கு!நற்செய்தி:

யோவான் 7:16-17.16.

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
நல்வழி:
சொந்தக் கருத்தைப் பிடித்துக் கொண்டு,

சொல்லால் விழுவோர் எத்தனை பேர்?

அந்தக் கருத்தில் உண்மை உண்டோ?

ஆய்ந்து நடப்போர் எத்தனை பேர்?

எந்தக் கருத்தும் இறையின் விருப்பா,

என்று பார்ப்போர் எத்தனை பேர்?

தந்தை இறையின் வாக்குரைக்கும்,

மைந்தன் வழியில் எத்தனை பேர்?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.