3. பரிவு கொள்ளும் இறைவன்!

3. பரிவு கொள்ளும் இறைவன்!

ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட

அந்த நாளின் நிகழ்வுகள்,

காணும் பேறு அடையாததால்,

கதையே என்று சொல்லுவர்.

பூணும் நல்ல அறிவுப் பூக்கள்

பொதிந்த நற்கருத்துகள்,

நாணும் நம்மைச் சீர்ப்படுத்தும்.

நம்புவோரே வெல்லுவர்!

(தொடக்க நூல் 3:1-6)

May be an image of text that says 'Forbidden Fruit Genesis 3:1-6'

தனிமை கொண்ட மனிதன் கண்டு,

தகும் துணை இறை தேடினார்.

இனிமை தரும் இணையாள் ஈந்து,

இவரில் இல்லறம் நாடினார்.

புனிதம் ஆளும் உறவின் வாழ்வு

புரியவே இருவரும் கூடினார்.

மனிதர் அறிய ஒருவனுக்கொருத்தி,

மறை மொழியையே பாடினார்!

(தொடக்க நூல் 2:18-25)

May be a graphic of text that says 'God's Design for Marriage Genesis 2:18-25'

தன்னைப் போன்றே படைத்தார்;

தன் பண்பாகவே படைத்தார்.

இந்நிலச் செல்வம் கொடுத்தார்;

யாவையும் ஆளவே கொடுத்தார்.

எந்நிலை என்று பார்த்தால்,

இறை கீழ் உயர்நிலை என்பார்;

அந்நிலை போதும் அரசே;

அழகு உமது படைப்பே!

(தொடக்க நூல் 1:28-31)

May be a graphic of Haystack Rock and text that says 'GOD BLESSED THEM. GOD SAID TO THEM, "BE FRUITFUL, MULTIPLY, FILL THE EARTH, AND SUBDUE IT. HAVE DOMINION OVER THE FISH OF THE SEA, OVER THE BIRDS OF THE SKY, AND OVER EVERY LIVING THING THAT MOVES ON THE EARTH." GENESIS 1:28 WEB'

ஒவ்வொரு படைப்பும் கண்டு,

இறையே மகிழ்வு கொண்டு,

அவ்வகை அனைத்தும் நன்று,

என்று சொன்னார் அன்று.

இவ்வித படைப்பில் மிக நன்று

,எதுவெனக் கேட்பார் இன்று.

எவ்விதத்திலும் மனிதனென்று,

இறை வாக்குரைப்பதுண்டு.

இப்படிச் சொல்கிற போது

எப்படி என்பாருமுண்டு.

தப்புகள் நீங்கும் என்று,

தருகிறேன் ஏது இன்று.

ஒப்பிலாப் பிறவி மனிதர்;

உண்மையில் இறை சாயல்.

அப்படியாகத்தான் படைத்தார்;

அனைவரையுமே அன்று!

(தொடக்க நூல் 1:4-27)

May be an image of 4 people and text that says 'GOD created man in his own IMAGE. GENESIS 1:27 ChristianQuotes.info'

இல்லாமையிலிருந்து எல்லாம்!

2. இல்லாமையிலிருந்து எல்லாம்!

ஒன்றுமற்ற நிலையே அன்று;

ஓழுங்கில்லை. ஒளி இல்லை.

என்று கண்டு இறையுரைத்தார்,

ஒளி தோன்றுக என்று.

நன்கு இதை எண்ணிப் பார்ப்பீர்,

நம்மிலும் தேவை ஒளியே.

இன்று இந்த வேட்கையோடு,

இறையிடம் கேட்பதே நன்று!

(தொடக்க நூல் 1:1-3)

May be an image of text that says 'AND GOD SAID "Let there be light," and there was light. GENESIS1:'

இறைவன் எங்கே?

இறைவன் எங்கே? 

(எழுதி வழங்குபவர்:

கெர்சோம் செல்லையா)

அங்குமில்லை, இங்குமில்லை, 

ஆண்டவர் எனும் இறைவன்;

எங்குமில்லை, எங்குமில்லை, 

என்கிறான் அறியா மனிதன்.

உங்களுள்ளே உங்களுள்ளே 

ஒளிந்து கடந்திருப்பேன்.

இங்கு எனை ஏற்பவர் யார்?

என்கிறான் நல்லிறைவன்!

இன்று இறை காண்பதற்கு 

என்னவெல்லாம் உண்டு? 

என்று இங்கு கேட்பவர்க்கு,

நல்ல விடை உண்டு.

நின்று அசைந்தாடுகின்ற 

நிலையில்லா இயற்கை 

அன்று முதல் சொல்கிறது,

அதுவே  படைப்பென்று!

படைப்பு ஒன்று உண்டு எனில்,

படைத்தவர் அவர் எங்கே? 

கிடைத்திடும் வரலாறுகளில் 

கேட்கிறார் பலர் இங்கே. 

துடைத்திடும் கண் காட்சிகளில்,

தெரியாது இருப்பதினால்,

விடைக்கெல்லாம் அடித்தளமாம் 

விவிலியம் பார், அன்பே!

தொடரும்……

போதாது! போதாது!

போதாது! போதாது!

இறை மொழி: யோவான் 21:25.

25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்

இறை வழி:

இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,

எழுதிய நூல்கள் போதாது.

குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு

கொடுத்த தாள்கள் போதாது.

மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,

மாட்சி சொல்வரும் போதாது.

நிறைவின் வாழ்வு இறைதானென்று,

நேர்வழி செல்வரும் போதாது!

ஆமென்.

எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.

May be an image of 1 person and beard

சான்றுரைக்கும் யோவான்!

கண்டவன் சான்று!

இறை மொழி: யோவான் 21:24.

24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

இறை வழி:

அன்று கண்ட அடியார் யோவான்

அதனைச் சான்றாய் எழுதினார்.

நன்கு கண்ட காட்சியைத்தான்,

நம்பி மெய்வழி ஒழுகினார்.

பின்பு நமக்கு எழுதும் முன்னர்

பெரிய அன்பிலே முழுகினார்.

இன்று இதனை வாசித்தறிவோர்,

ஏற்பின் தம் கறை கழுவுவார்!

ஆமென்.

May be an image of 1 person and text

இறை விருப்பு எது?

இறை விருப்பு!

இறை மொழி: யோவான் 21: 20-23.

20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.

21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.

22. அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.

23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.

இறை வழி:

பேரிடி முழங்க இறைவாக்கீந்து

பேர் புகழ் பெருக்க விழைகையில்,

ஓரடி மட்டும் என் முன் சென்று,

ஒளி வீசும் என் கிறித்துவே,

ஆறடி மண்ணுள் அடங்கு முன்பு,

அடியன் கனி தரும் விளைச்சலில்,

சீரடி வைத்துச் சிறியருக்குதவ,

சிந்தை ஈவாய் கிறித்துவே!

ஆமென்.

May be an image of 4 people

என்னிலையாயினும்!

எந்த நிலை என்றாலும்!

இறை மொழி: யோவான் 21:18-19.

18. நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

19. இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

இறை வழி:

எந்நிலை என்பதில் இல்லை;

இயேசுவே எனக்கு எல்லை.

அந்நிலை நோக்கிச் செல்வேன்;

அதுவே வாழ்வெனச் சொல்வேன்.

இந்நிலை அடைந்த முன்னோர்,

இவ்வழி நடந்து சொன்னோர்,

செந்நிலைக் கென்றே அழைத்தார்;

சிலுவை சுமந்துயிர் பிழைத்தார்!

ஆமென்.

May be an image of text that says 'John 21:18-19, "Verily, verily, say unto thee, When thou wast young, thou girdedst thyself, and walkedst whither thou wouldest: but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and carry thee whither thou wouldest not. This spake he, signifying by what death he should glorify God. And when he had spoken this, he saith unto him, Follow me."'