புனிதன் எழுந்து வருவாரே!
இறைவாக்கு: மத்தேயு 27:62-66.
கல்லறைக்குக் காவல்:
“மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், ‘ ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘ மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன் ‘ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘ இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ‘ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும் ″ என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், ‘ உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள் ‘ என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.”
இனிய வாழ்வு:
கல்லால் மூடிக் காவல் புரிந்தால்,
கடவுளின் வாக்கு பலிக்காதோ?
சொல்லாம் இறைவன் சொன்னதைச் செய்வார்;
சொந்த மகனை இழப்பாரோ?
எல்லாம் நோக்கும் இறைவனின் செயலை
யாவரும் காண வருவீரே.
பொல்லார் வெட்க, பொய்மை அழியும்,
புனிதன் எழுந்து வருவாரே!
ஆமென்.