நம்பிக்கையற்ற தலைமுறையே!
நற்செய்தி மாலை: மாற்கு 9:16-19.
“அவர் அவர்களை நோக்கி, ‘ நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘ போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ‘ என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘ நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
நம்பிக்கை அற்ற தலைமுறையே,
நன்கு நோக்கு உன் குறையே!
கும்பிடச் செல்லும் கோயிலிலே,
கிறித்தவன் என்பதில் பயனிலையே!
எம்பி நிற்கவும் வலுவற்றே,
ஏழையர் கிடக்கிறார், பார் சற்றே!
தும்பிக் கையாய் நீ இன்றே,
தூக்கி உயர்த்து, இது நன்றே!
ஆமென்.