பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:13-15.
“அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.”
நற்செய்தி மலர்:
பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே,
பணியைக் கொடுத்து அனுப்பி வைத்தீரே.
சென்னிற வேர்வை சிந்தி அவரே,
செய்தியைக் கொடுத்து உமைப் புகழ்ந்தாரே.
என்னிரு கையிலும் பொறுப்பீந்தவரே,
எழுதி, பேசி உமைத் தொழுவேனே.
நன்னிலமாக நெஞ்சுகள் வரவே,
நற்செய்தியாலே நான் உழுவேனே!
ஆமென்.