இரக்கம்!

இரக்கம் என்னும் இறையின் பண்பு!

இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம் இன்று.
உருக்கம் கொண்ட இயேசு போன்று,
உதவி செய்வதே எவர்க்கும் நன்று.
மறுக்கும் நண்பர் பலபேர் உண்டு;
மாறுவர் ஒருநாள் உண்மை கண்டு.
பெருக்கும் செல்வம் அன்புகொண்டு,
பேருலகிற்குச் செய்வோம் தொண்டு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, people sitting, table and indoor

முள்ளுடன் வளர்ந்த செடிகள்!

முள்ளுடன் வளர்ந்த செடிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:14.
14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கொள்ளும் கவலை ஒருபக்கம்,
கோடிகள் தேடல் மறுபக்கம்;
அள்ளும் இன்பத்தால் நெருக்கம்.
அவர்கள் வளர்வது எப்பக்கம்?
தெள்ளத் தெளிவாய் தெரிந்திடுவோம்;
தெய்வ வாக்கைப் புரிந்திடுவோம்.
உள்ளும் புறமும் வளர்வதற்கு,
ஒவ்வாப் பண்புகள் உரிந்திடுவோம்!
ஆமென்.

Image may contain: plant, tree, outdoor and nature
Comments

பாறையில் விழுந்தவை!

பாறையில் விழுந்தவை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:13.
13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சொல்லை அழகாய்ப் பாடலாக்கிச்
சொன்னால், ஆமாம் என்றிடுவார்.
கல்லைக் காட்டும் நெஞ்சம் மறைத்துக்
கயமையின் கூட்டாய் நின்றிடுவார்.
இல்லை இவரில் நன்மை என்று,
எளியோர் வருந்திச் சென்றிடுவார்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒருநாள்,
யாவையும் பொடித்து வென்றிடுவார்!
ஆமென்.

Image may contain: outdoor
Like

மாட்டுப் பொங்கல் நாளில்,

மாட்டுப் பொங்கல் நாளில்,
மறைந்த எங்கள் தந்தை
கொ.செல்லையா அவர்களின்,
15-ஆம் ஆண்டு நினைவு நாள்!

கோடாய், குன்றாய், குளிரும் ஆறாய்,
வாடாதிருக்கும் வளத்தில் நூறாய்,
தேடாரையுமே இழுக்கும் பேறாய்,
தெரியும் எங்கள் திருவட்டாறே!
கேடாய் கையில் வாங்காய் என்று,
கெடுவார் முன்பு உரைத்து அன்று,
மாடாய் உழைத்த தந்தை இன்று,
மறைந்த நாளை மறந்திட்டாயே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 2 people

பாதையில் விழுந்த விதைகள்!

பாதையில் விழுந்த விதைகள்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா 8:11-12.
11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.

கிறித்துவில் வாழ்வு:
தூதின் நறுமணம் ஏற்காதவர்தான்,
தூய்மை நேர்மை வெறுக்கின்றார்.
காதில் விழுந்த இறைவன் வாக்கைக்
கருத்தில் கொள்ள மறுக்கின்றார்.
தீதில் அமிழும் நெஞ்சத்தார்தான்,
தீவிரம் வாழ்வை அறுக்கின்றார்.
பாதைவழியில் விழுந்த வித்தாய்,
பறவை உண்ணப் பறக்கின்றார்!
ஆமென்.

Image may contain: bird

உவமைகளில் இறையரசு!

உவமைகளில் இறையரசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:9-10.
9 அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

கிறித்துவில் வாழ்வு:
மறைந்திருப்பதுதான் மறைபொருளாகும்.
மானிடருக்கு மறைவாய் இருக்கும்.
திறந்தளிப்பதுதான் இறையருளாகும்.
தெளிவும்கூட நிறைவாய் இருக்கும்.
இறந்தவர் அமைப்பது மண்ணரசாகும்.
இங்கு யாவுமே அவமாயிருக்கும்.
நிறைந்த வாழ்வோ விண்ணரசாகும்.
நீங்கள் கற்க, உவமையாயிருக்கும்!
ஆமென்.

Image may contain: text
Like

பாகுபாடு பாரா இறைவன்!

பாகுபாடு பாரா இறைவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:4-8.
4 சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

கிறித்துவில் வாழ்வு:
வெவ்வேறு நிலங்கள் பார்க்கச் சென்றோம்.
விரும்பாதவற்றை வேண்டாம் என்றோம்.
இவ்வாறு சிலபேர் செய்திட நின்றோம்;
இறையோ எங்கும் விதைப்பது கண்டோம்.
ஒவ்வோர் ஆளும் ஒவ்வொரு நிலமாம்.
ஒதுக்கி வைத்தல் இறையில் இலையாம்.
செவ்வனே விதைக்கச் செல்கிறார் வலமாம்;
செய்திப்படி நாம் செய்வதே நலமாம்!
ஆமென்.

Image may contain: one or more people, people standing, outdoor and nature
Like

இறைப்பணியில் பெண்கள்!

இறைப்பணியில் பெண்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:2-3.
2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எந்த பணியை யாருக்கென்று,
இறைமகன் அறிந்து பணி கொடுத்தார்.
அந்த வகையில் ஆணுக்கிணையாய்
அன்னையர் கன்னியர் பணி எடுத்தார்.
இந்த நாளிலும் இயேசுவின் வழியில்,
இறைப்பணி பெண்கள் செய்கின்றார்.
சொந்த நலனைத் துறந்து ஆற்றும்,
தூயருக்கிரங்குவோர் உய்கின்றார்!
ஆமென்.

Image may contain: 3 people, baby
Comments

இறைவாக்கு கேட்பீரே!

இறைவாக்கு கேட்பீரே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:1.
1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடியாரே, அடியாரே,
அன்பு மொழி கேட்பீரே!
பொடியாகும் பூவுலகைப்
பொய்யினின்று மீட்பீரே.
தடியாலும் வாளாலும்,
தவறி விட்டார் நாட்டாரே.
மடியாமல் இவர் வாழ,
மறையறிவு கொட்டீரே!
ஆமென்.

Image may contain: text

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!

உங்கள் பற்றுறுதி உங்களை மீட்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7: 47-50.
47 ஆதலால் நான் எனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்ற சொல்லி;
48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றுறுதி கொண்டவரின்
பாவமெல்லாம் ஒழியும்.
பெற்றுவரும் நன்மையினால்,
பேரன்பைப் பொழியும்.
கற்றறிந்த இறையறிவைக்
காண்பவர்க்கு மொழியும்.
சுற்றுமுள்ளோர் மீட்புறுவார்;
திறந்ததுவே வழியும்!
ஆமென்.

Image may contain: 1 person