இளமையில் கல்!

இளமையில் கல்!
இறைவாக்கு: லூக்கா 2:46-47.
46 மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

இறைவாழ்வு:
சிற்றிளம் வயதில் சேர்ப்பது என்ன?
சிறகுகள் விரித்துப் பார்ப்பது என்ன?
பெற்றிட வேண்டிய செல்வம் என்ன?
பிள்ளைகளே உம் விருப்பம் என்ன?
கற்றிடும் பருவம் இளவயதாகும்.
கரையாச் செல்வம் கல்வியேயாகும்.
முற்றின அறிவு கிறித்துவேயாகும்;
முயலும் அவர்போல், வெற்றியேயாகும்!
ஆமென்.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

Comment

Comments

ஈராறு அகவை முடித்த இயேசு

ஈராறு அகவை முடித்த இயேசு

இறைவாக்கு: லூக்கா 2:41-45.
41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.

இறைவாழ்வு:
ஈராறு அகவை முடித்துவிட்டால்,
யூதர் இளைஞர் ஆகிடுவார்.
சீராக வாழத் தமை ஈய,
செருசலேம் கோயில் ஏகிடுவார்.
வாராது வந்த இறைமகனும்,
வாழ்வைப் படைக்கச் செல்கின்றார்.
பாராது போகும் இளைஞர்களே,
பணிவோர் வாழ்வில் வெல்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

இறையருள்-அறிவு பெருகுக!

Image may contain: text
LikeShow More Reactions

Comment

இறையருள்-அறிவு பெருகுக!
இறைவாக்கு: லூக்கா 2:39-40.
39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
 
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
 
இறைவாழ்வு:
என்னாவி என்பொருள் என்னுடலை
எனது விருப்பில் இயக்கிவிடின்,
பொன்னாலும் வாங்க இயலாத,
புதையல் அறிவருள் கிடைக்காதே.
தன்னாவி தன்பொருள் தன்னுடலை,
தந்தையாவியுள் கொண்டு வரின்,
பின்னாளில் இன்பம் பெரிதுறுவாய்.
பெருமையில் அதனை உடைக்காதே!
ஆமென்.

அன்னாளைப் போல்….

அன்னாளைப் போல்….
இறைவாக்கு: லூக்கா2:36-38.
36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.

இறைவாழ்வு:
எண்பத்து நான்கு வயதானாலும்,
இறைப்பணி செய்தார் அன்னா.
கண் செத்து முடும் காலமளவும்,
கருத்தாய் உழைப்பேன் மன்னா.
பெண்ணை மதியா மக்கள் நடுவே,
பெரும்பணி செய்தவர் அன்னா.
உண்மை மட்டும் உரக்கக்கூறி,
உம் பணி செய்வேன் மன்னா!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

மதிக்க மறந்த மனிதருக்கு!

மதிக்க மறந்த மனிதருக்கு!

துறவியாய் வாழ்ந்த துயரைப் போற்றி,
தொண்டு செய்தார் அன்று.
மறதியாய்க்கூட மதிக்கவிலையே,
மன நலமற்றோர் இன்று.
இறைவனாவி இல்லாரிடமே
இப்படி நிகழும் என்று,
பிறவி எடுத்த எவர்க்கும் சொல்வேன்,
பெரும் பணிவோடு நின்று!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 15 people, including Isaac Jebastin Asfcyf, child
LikeShow More Reactions

Comment

Comments

உருவிய கத்தி!

உருவிய கத்தி!
இறைவாக்கு: லூக்கா 2:33-35
33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.

இறைவாழ்வு:
உண்மை ஒழுக்கம் என்பவர் வாழ்வில்
உருவிய கத்தி பாய்கிறதே.
பெண்ணின் பெருமையாகும் மரிமேல்,
பெரிய துன்பம் சாய்கிறதே!
எண்ணிப் பார்த்தால் இவற்றில்கூட
இறையின் அனுமதி தெரிகிறதே.
கண்ணைமூடி ஒப்புக் கொடுப்போம்;
கடவுளின் மீட்பு புரிகிறதே!
ஆமென்.

No automatic alt text available.

அமைதி பெறுவீர்!

அமைதி பெறுவீர்!
இறைவாக்கு: லூக்கா 2:27-32.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

இறைவாழ்வு:
ஆண்டவர் மீட்பை அறிந்தவர் மட்டும்,
அமைதியை வாழ்வில் பெற்றிடுவார்.
மாண்டவர் இயேசுவை ஏற்காததினால்,
மனதினில் தோல்வி உற்றிடுவார்.
மீண்டவராக உள்ளம் மகிழ,
மீட்பர் இயேசுவை ஏற்றிடுவீர்.
தாண்டிச் செல்லும் புயல்களெல்லாம்;
தாங்கும் அவரைப் போற்றிடுவீர்!
ஆமென்.

Image may contain: ocean, cloud, text, nature and water
LikeShow More Reactions

Comment

ஓர் ஏழையின் ஏக்கம்!

ஓர் ஏழையின் ஏக்கம்!

பார்ப்பன பனியா நிறுவனம் வளர,
பரிசளித்தோமா இந்தியா?
தோற்பவர் இங்கே ஏழை எளியர்;
துயரில் தள்ளவே வந்தியா?
ஆர்ப்பரிப்போடு பேசிய வாக்கு,
‘அச்சே தின’த்தைத் தந்தியா?
சேர்ப்பது என்றும் ஏழையர் வாக்கு!
சிறியருக்கிரங்க முந்தையா!

-கெர்சோம் செல்லையா.

இறை காண்போம்!

இறை காண்போம்!

மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும், 
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: flower, plant, nature and text
LikeShow More Reactions

Comment

இறைவழி!

இறைவழி!

இருக்கும் இடத்தை ஏதேனாக்கும்
எளிய தொண்டில் இறை பாரும்.
செருக்கும் வெறுப்பும் தீங்குருவாக்கும்.
செய்ய மறுப்பின் குறை தீரும்.
பெருக்கும் ஊற்றாய் அன்பு சுரக்கும்
பெருந் தன்மையே இறையாகும்.
நெருக்கும் தொல்லை தருவோருக்கும்,
நேர்மைப் பரிசே, முறையாகும்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, plant, tree and outdoor
LikeShow More Reactions

Comment