-
தொடருவேன் இறை நம்பிக்கையில்!
நற்செய்தி மாலை:மாற்கு 10:38-40.
“இயேசுவோ அவர்களிடம், ‘ நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ இயலும் ‘ என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ‘ நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
அன்பின் ஊழியம் என்றாலும்,
அடைகிறேன் ஆயிரம் துன்பங்கள்.
பொன்பொருள் வெறுத்து நின்றாலும்,
பொங்குதே துயரக் கிண்ணங்கள்.
இன்று நான் மூழ்கிச் சென்றாலும்,
எழுப்புவார் இயேசு தம் கைகளில்.
துன்பமே வாழ்கையை வென்றாலும்,
தொடருவேன் இறை நம்பிக்கையில்!
ஆமென்.
Month: September 2016
ஏறிட இறங்குவோம்!
ஏறிட இறங்குவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:35-37.
“செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ‘ போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ‘ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ‘ என்று வேண்டினர்.”
நற்செய்தி மலர்:
வாழ்வுயர்த்தும் வாஞ்சை கொண்டு;
வரம்பு மீறிக் கூறுகிறார்.
தாழ்நிலையின் மக்கள் கண்டு,
தலை மிதித்து ஏறுகிறார்.
பாழ்நிலமாய்ப் பலபேர் உண்டு;
பதவி வெறியில் மாறுகிறார்.
ஏழ்மையான இயேசு கண்டு,
இறங்கினோரே தேறுகிறார்!
ஆமென்,
அறுபத்து ஐந்து முடித்து….
இருபத்தியேழு ஆண்டுகள் வெறுத்தேன்;
இல்லை இறைவன், என்று மறுத்தேன்.
பொருளியல் கற்று, பொருளைச் சேர்த்தேன்;
போனபின், இழிந்த நிலையும் பார்த்தேன்.
திருமறை மட்டுமே சொத்தாய் ஏற்றேன்;
தெய்வ அருளால் தெளிவைப் பெற்றேன்.
அறுபத்து ஐந்து ஆண்டுகள் முடித்தேன்.
ஆண்டவர் அரசு அமையவே துடித்தேன்!
-கெர்சோம் செல்லையா.
நாளை நடப்பதை நாம் அறிவோமா?
நாளை நடப்பதை நாம் அறிவோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:32-34.
“அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், ‘ இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நாளை நடப்பதை, நாம் அறிவோமா?
நம்பிக்கையால் முன்னறிவோமா?
வேளை அறிந்து, முன்னே விரைந்த,
வேந்தன் வாக்கை, அறிவிப்போமா?
ஆளை மீட்கும், அவரது பணியில்,
அன்பை விதைக்க, முன் வருவோமா?
தாளைப் பணிந்து, நாமும் கேட்டால்,
தருவார் விளைச்சல், பயன் பெறுவோமா?
ஆமென்.
காவிரியை மறக்க வழியென்ன?
காவிரியை மறக்க வழியென்ன?
சம்மதிக்காததால் கொலையைச் செய்தார்;
நிம்மதியிழப்பால் தற்கொலை செய்தார்.
இம்மாதிரியில் கதைகள் புனைந்தார்;
நம் நாட்டவரோ காவிரி மறந்தார்!
-கெர்சோம் செல்லையா.
எதைத் துறந்தேன் இயேசுவிற்காக?
எதைத் துறந்தேன் இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு 10:28-31.
“அப்போது பேதுரு அவரிடம், ‘பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எதைத் துறந்தேன் உமக்காய் என்று
இன்று நானும் பார்க்கையிலே,
எதுவும் இல்லை என்றறிந்து,
என்னில் நானே வருந்துகிறேன்.
விதை விழுந்து மறைந்தால்தானே,
விளைச்சலாகும் என்றறிந்து,
விட்டுவிட்டேன் தன்னலத்தை,
விண்ணரசே திருந்துகிறேன்!
ஆமென்.
எப்படி மீட்படைவேன்?
எப்படி மீட்படைவேன்?
நற்செய்தி மாலை: மாற்கு 10:26-27.
“சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ‘ மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ‘ என்றார். ”
நற்செய்தி மலர்:
இனிய மீட்பைப் பெற்றுக்கொள்ள,
இயலாதவன் நான் விழுகின்றேன்.
புனிதம் என்னில் சிறிதும் இல்லை;
புரிந்து நெஞ்சில் அழுகின்றேன்.
மனிதர் மீள மண்ணில் வந்த
மா அருளாளனைத் தொழுகின்றேன்.
எனினும் என்ற ஐயமேயில்லை;
இயேசு மீட்பார் எழுகின்றேன்.
ஆமென்.
துபாய் மன்னர்
உடலைக் காட்டி ஊரை விழுங்கும்,
உயர்தரக் கூத்து ஆடிகளே,
கடலில் இறங்கும் மன்னரின் பண்பில்
கால் பங்காவது தேடுங்களே!
மக்களுடன் மக்களாய் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபர் என்ற கர்வம் இல்லாமல்சாதாரணமாய் துபாய் அதிபர்.மாண்புமிகு.சேக் முகமது பின் ராசித் அல் மக்தும் அவர்கள்.கடலில் குளிக்கும் காட்சி
ஊசியின் காதினுள் ஒட்டகமா?
இறைவனுக்குக் கடன் கொடுப்போம்!
இறைவனுக்குக் கடன் கொடுப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 10:20-21.
“அவர் இயேசுவிடம், ‘ போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ‘ என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ‘ என்று அவரிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
கண்முன் காணும் எளியோர் வாழ,
கனிந்து உதவி புரிபவர் யார்?
விண்ணின் அரசர் இவருரு எடுத்து,
வேண்டி நிற்பதைத் தெரிபவர் யார்?
எண்ணும் காசை ஏழைக்கு ஈந்தால்,
இறைவன் கடனாய் எண்ணுகிறார்.
மண்ணில் செய்யும் நன்மை கண்டு,
விண் வீட்டறையைப் பண்ணுகிறார்!
ஆமென்.