இன்று தேர்தல் நாள்!

இன்று தேர்தல் நாள்!


விலை பேச வருபவரை,

விரும்புகிற மக்கள் இங்கே.

நிலை மாற உழைக்கின்ற,

நெறியாளர் இன்று எங்கே?

கலையாத உடை உடுத்தும்,

கட்சியினர் உண்டு இங்கே.

தலையான தொண்டுள்ளம்,

தமிழகத்தில் எங்கே எங்கே?


-கெர்சோம் செல்லையா. 

நாடு இங்கே! நாடிங்கே!
நற்செய்தி: யோவான் 6:39-40.39.

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

நல்வழி:

ஒரு சிலர் வாழ ஊரையே அழிக்கும்,

உண்மையை உணரார் நாடு இங்கே.

வறுமையில் வாடும் அனைவருக்களிக்கும்,

வானருள் மீட்பை நாடிங்கே!

பெருந்திரள் செல்வம் வாழ்வென உழைக்கும்,

பேதையர் ஆடும் நாடு இங்கே.

சிறுவன் என்றாலும் சென்றே அழைக்கும்,

சீரருள் மீட்பரை நாடிங்கே!   


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

யோவான் 6:38.

 நல்வழி:

இப்புவியில் இறங்கி வந்த,

இறைமகனை நோக்கிப் பார்.

எப்பண்பில் அவர் இருந்தார்,

என்றெண்ணித் தூக்கிப் பார்.

தப்பிதங்கள் பொறுத்தருளும்,

தன்மைகளை ஆக்கிப் பார்.

அப்புறம் நீ காண்பதென்ன?

அதிசயங்கள், தேக்கிப் பார்!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

நாட்டம் கொண்டோர்…

நாட்டம் கொண்டோர் நாடி வருவார்

!நற்செய்தி: யோவான்: 6:37.37.

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

நல்வழி:

கூட்டம் கூட்டி, நாட்டைக் கவரும்,

கொள்கை அல்ல கிறித்தவம்.

ஆட்டம் காட்டி ஆளை மயக்கும்,

அவலமும் அல்ல கிறித்தவம்.

வாட்டம் ஓட்டி, வாழ்வைக் காட்டும்,

வழி முறையே கிறித்தவம்.

நாட்டம் கொண்டோர் நாடி வருவர்;

நன்மை செய்வதே, கிறித்தவம்!

ஆமென்

.-கெர்சோம் செல்லையா.

என்றாலும் நம்பவில்லை!

நம்பவில்லை!
நற்செய்தி: யோவான் 6:36.

நல்வழி:


கண்டோரும் நம்பவில்லை, 

காணாரும் விரும்பவில்லை.

தண்டோரா போட்டுரைத்தும்,

தாய் நாட்டார் ஏற்கவில்லை.

என்றாலும் உரைக்கின்றோம்;

இறையன்பைத் திறக்கின்றோம்.

இன்றளவும் பயனில்லை.

எனினும் நாம் தோற்பதில்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

உணவு, நீர்!

உயிருணவு!
நற்செய்தி: யோவான்: 6:35.  

நல்வாழ்வு:


மும்முறை வருகிற பசி விடாய்ப்பு,

முறையாய் என்னில் வருமுன்பு,

இம்முறை இல்லை என்றுரையாது,

இன்னீர் உணவு தருபவரே,

உம்மிடம் வந்தோர் ஒரு பொழுதாவது,

உணவிற்கலைந்து வருந்துவது,

நம்புதற்கரிது என்னும்படிக்கு,

நன்னீர் உணவு தருவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

விண்ணுணவு!

நல்வழி:


நன்னில உணவைப் பகிர்ந்து உண்டால்,

 நல் வாழ்வமையும், நாடும் மகிழும்.

பொன் பொருள் கொடாத பெருவாழ்வின்பம்,

புவியில் பெருகும், புன்னகை மலரும்.

இன்னிலத்தார்க்கு இவ்வறிவூட்ட,

இறையே வந்தார்; தன்னுயிர் ஈந்தார்.

அன்னார் உடலே அருவிருந்தாகும்;

அதுபோலளிப்போம், பெருவாழ்வாகும்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.