நல்வாழ்த்து:
Month: May 2014
கடன்பட்டார்!
காசையும் உறவையும் இழந்துவிடு.
ஆசைச் சொல்லுடன் வந்தவர்கள்
அப்படி மறைவதைப் பார்த்துவிடு!
தூசைத் தட்டி எழும்பி விடு;
துயர் தருவாரை மறந்துவிடு.
ஏசையாமேல் பற்று வைத்து
ஏழையருக்கு இரங்கிவிடு!
-கெர்சோம் செல்லையா.
இவர்கள் விடுதலை பெறுவாரா?
இனிய வாழ்வில் மகிழ்வாரா?
அவலம் மறைக்கவும் உடையில்லை;
அதையே அழகு என்பாரா?
எவர்கள் உதவிட வருவாரோ,
அவர்கள் இறையின் ஊழியராம்;
சுவர்கள் எழுப்பிப் பிரிக்காமல்,
சேர்க்கும் பணியைச் செய்வாராம்!
-கெர்சோம் செல்லையா.
பட்டணம் பார்த்து படைத்தவரைப் பார்!
பட்டண அழகில் மகிழ வருவாய்.
கட்டணம் எதுவும் கொடுக்க வேண்டாம், இங்கே
காணும் படைப்பில் கடவுளைக் காண்பாய்!
-கெர்சோம் செல்லையா.
அருட்செய்தி
கேட்டு மகிழ்வீர் நற்செய்தி;
கிறித்து வழங்கும் அருட் செய்தி!
நல்வாழ்த்து:
காது உள்ளவர் கேட்பார் என்றீர்;
காதைப் பெற்றுக் கேட்கின்றோம்.
வாது எல்லாம் நீங்கச் செய்வீர்;
வாழ்த்தி உம்மைத் தொழுகின்றோம்.
தீது நாளில் உந்தன் வீட்டில்
பாதுகாப்பீர், புகழ்கின்றோம்.
ஏது மில்லா இந்த வாழ்வை
இனிமையாக்கும், வாழ்கின்றோம்!
நல்வாக்கு:மத்தேயு 26:14-16.
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்:
“பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ‘ இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ‘ என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”
நல்வாழ்வு:
முப்பது வெள்ளிக் காசிற்காகக்
முடிச்சில் விழுந்தான் யூதாசு.
அப்போதிருந்தது போன்று இன்றும்
அழிக்கப் பார்க்கிறான் பிசாசு.
தப்பாய்ச் செல்வம் சேர்க்க விரும்பின்
தாவி ஓடுமே நம் காசு.
எப்போதும் நாம் மறக்க வேண்டாம்;
இயேசு போதுமே, இவை தூசு!
ஆமென்.
திருவள்ளுவர்
இன்று எழுதித் தந்திருந்தால் உமைத் தள்ளுவர்!
என்று சொல்லும் அளவில் இங்கு இன வெறி.
நன்று, நமது நாடும் தேடிடாதா நன்னெறி?
– கெர்சோம் செல்லையா.
நல்ல செய்தி
அறிவைத் தருவது நற்செய்தி;
அதன்படி நடப்பின் உயிர்மீட்சி!
“இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் அவரிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றினார். இதைக் கண்ட சீடர்கள் கோபமடைந்து, ‘ இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே ‘ என்றார்கள்.
மேலோனைப் போற்றி!
மாத்தூர் தொட்டில் பாலம்:
வட்டாற்றில் பிறந்திருந்தும்
வாழ்வதுவோ இரட்டேரி.
கட்டான உன்னழகைக்
காணுவேன் வந்தேறி!
திட்டான குன்றிரண்டைத்
திறக்கும் ஆற்றின்மேல்,
மொட்டாக உனை வைத்த
மேலோனைப் போற்றி!
– கெர்சோம் செல்லையா!
கண்ணீர்க் கதை!
சொல்லில் எழுத அறியேனே.
பல்லைக் காட்டி உலகோர் முன்
நில்லார் இவரைப் புகழ்வேனே.
எல்லாம் அறிந்த இறைமகனே,
இல்லார் இவரை நோக்கிடுமே.
பொல்லார் நினைவு பொய்த்திடவே,
நல்லாயனாய் மீட்டிடுமே!
-கெர்சோம் செல்லையா.