புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள்!

இத்தனை ஆண்டுகள் எனக்கீந்தீர்;
இறைவா, உமக்கு என் செய்தேன்?
மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;
மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.
எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;
எல்லாம் உம் அருள் என்றறிவேன்.
அத்தனே, உம் புகழ் பாடுவதே,
அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!
ஆமென்.

புத்தாண்டு வாழ்த்துகள்!

இத்தனை ஆண்டுகள் எனெக்கீந்தீர்;

இறைவா, உமக்கு என் செய்தேன்?

மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;

மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.

எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;

எல்லாம் உம் அருள் என்றறிவேன்.

அத்தனே, உம் புகழ் பாடுவதே,

அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!

ஆமென்.

வெளியே நிற்கின்றார்!

வெளியே நிற்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 2 :1-2.
“சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
எண்ணற்ற மக்கள் வெளியே நிற்கின்றார்;
இயேசுவைக் காண்பதற்கு ஏங்கித் தவிக்கின்றார்.
கண்ணற்று நாமும் கைலாகு கொடாதுவிடின்,
கடவுளின் அரசிற்கு வராது சென்றிடுவார்.
விண்ணற்று இவர்கள் விழுவது இறைவிருப்போ?
வேண்டாம் இத்தவறு, விழித்து எழுந்திடுவீர்.
பண்ணற்ற பாடல் பாடுதல் விட்டு விட்டு,
பாருங்கள் ஏழையரை, பாங்காய் உதவிடுவீர்!
ஆமென்.

நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!

நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு 1: 45.
“ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
நன்மை பெற்றவர்கள் நன்றியில் உரைக்கட்டும்;
நற்பணியாளர்களோ தம்மைத் தாழ்த்தட்டும்.
வன்மை விரும்பிகளும் வந்தே காணட்டும்;
வானவர் திருப்பணியை வாழ்த்திப் பாடட்டும்.

அன்றைய அருட்பணியை அகத்தில் நோக்கட்டும்;
ஆண்டவர் செய்ததுபோல் அடியரும் செய்யட்டும்.
இன்றைய தவறுகளை உணர்ந்தே திருத்தட்டும்;
இறைப்பணியாளர்களும் உண்மையில் திருந்தட்டும்!
ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்!

விளம்பரம் செய்யாதீர்!
நற்செய்தி மாலை : மாற்கு 1: 42-44.
“உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ‘ இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ‘ என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.”
நற்செய்தி மலர்:
எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்;
இயேசுவின் ஊழியர் புகைப்படங்கள்.
இங்கு இதனால் அவப்பெயர்கள்;
எரிச்சல், போட்டி, பொறாமைகள்.
சங்கு முழக்கும் திருப்பணிக்குச்
சாவின் மணியடி தேவையில்லை.
பொங்கு தவற்றைப் புதைக்காது,
பொய்மை போற்றின், பயனில்லை!
ஆமென்.

கிறித்து பிறந்த நாள் வாழ்த்து:

கிறித்து பிறப்பும், புத்தாண்டும்,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்,
மகிழ்வைத் தர வேண்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.
– கெர்சோம் செல்லையா & குடும்பம்.

“அழிப்பதற்கென்று உருவெடுத்து,
அவனியில் வந்தவர் பலருண்டு.
வழித்தடம் தவறிய மாந்தர்களை,
வந்து மீட்பவர் யாருண்டு?

பழித்திடக்கூட விரும்பாது,
பாவம் போக்கும் ஒருவருண்டு.
விழித்திடு கண்ணே, விழித்திடுவாய்;
விண்மகன் இயேசுவை நீ கண்டு!”
ஆமென்.

கிறித்து பிறக்க விடுவீரா?

கிறித்து பிறக்க விடுவீரா?

“நெஞ்சில் கிறித்து கருவுற்றால்,
நேர்மை செயலில் பிறந்திருக்கும்.
வஞ்சம் நிறைந்த உலகோர் முன்
வாய்மை அன்பால் சிறந்திருக்கும்.
கொஞ்சமும் இதனை எண்ணாது,
கொண்டாடும் நாம் கிறித்தவரா?
கெஞ்சிக் கேட்பேன் இன்னாளில்;
கிறித்து பிறக்க விடுவீரா?”
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!

தொழு நோயாளரையும் தொட்டுச் சேர்க்கும் அன்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 1:40-41.
“ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, ‘ நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ‘ என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ‘ நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ‘ என்றார்.”
நற்செய்தி மாலை:
தொற்றும் நோயில் கொடிய,
தொழுநோய் கொண்டு மடிய,
சற்றும் விரும்பா ஒருவர்,
சட்டம் மீறி வந்தார்.
முற்றும் வெறுக்கும் நிலையே;
மும்மை இறையில் இலையே.
பற்றின் உறுதி கண்டார்;
பரிவில் சேர்த்துக் கொண்டார்!
ஆமென்.

எங்கும் சொல்வோமா?

எங்கும் சொல்வோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 1:38-39.
“அதற்கு அவர், ‘ நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன் ‘ என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.”

நற்செய்தி மலர்:
எங்கே, எப்படி, யாருக்கு,
எடுத்துச் சொல்ல அழைப்பீரோ,
அங்கே, அவரது மீட்பிற்கு,
அருளைத் தராது இருப்பீரோ?
இங்கே காணும் இருளிற்கு,
என்னை விளக்காய் மாற்றீரோ?
மங்கா ஒளியைக் கொடுப்பதற்கு,
மெழுகாய் உருக்க மாட்டீரோ?
ஆமென்.

கொல்லச் சொல்பவன் கடவுளா?

கொல்லச் சொன்னாரா இறைவன்?

கொல்லச் சொல்பவன் கடவுளல்ல;
கொலைகாரன் என அறிவோமே.
நல்லதைச் செய்பவர்தான் கடவுள்;
நன்மை செய்து வாழ்வோமே!

கல்லா மனிதர் இதை உணர,
கடவுளின் செய்தி கொடுப்போமே.
எல்லாத் தீமையும் தீர்ப்பில் வரும்;
இறைவனின் அன்பில் மகிழ்வோமே!
– கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.
நற்செய்தி மாலை's photo.
Like ·  · Share

யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

நற்செய்தி மாலை 1: 36-37.

“சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ‘ எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ‘ என்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.
யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
நற்செய்தி மாலை 1: 36-37.
"சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், ' எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் ' என்றார்கள்."
நற்செய்தி மலர்:
தேடும் இறையைத் தேடிச் சென்று,
தேவை கேட்டல் நம் பண்பு.
ஆடும் ஆட்டம் அறமா என்று,
அறிந் துணர்தல் நற்பண்பு!
வாடும் ஏழை வறுமை கண்டு,
வழங்கும் அன்பே இறைத்தொண்டு.
கூடும் கூட்டம் புரிந்துகொண்டு,
குறை திருத்தின் வாழ்வுண்டு!
ஆமென்.
Like ·  · Share