கடன் கொடுக்கும் நெஞ்சம்போல்
கலங்கும் வேளைகளில்,
உடன் இருக்கும் இயேசுவினால்,
உள்ளம் மகிழ்வீரே!
திடன் கொடுக்கும் வாக்கருளித்
தெளிவைத் தருவதனால்,
மடை திறக்கும் வெள்ளம்போல்
மகிழப் புகழ்வீரே!
நல்வாக்கு:
மத்தேயு 26:45-46.
“பிறகு சீடர்களிடம் வந்து, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
முக்காலம் அறிந்தவர் நீர்;
மும்மையு மாயிருந்தீர்.
எக்காலம் அறிந்திருந்தும்
யூதாசைச் சேர்த்திருந்தீர்
இக்காலம் எம் வாழ்வில்
ஏய்ப்பவரைக் காண்கின்றீர்.
அக்கோலம் அறியாத
அடிமையின் கண் திறப்பீர்!
ஆமென்.