இறைவாக்கும் நிறைவாழ்வும்!
இறைவாக்கு: மத்தேயு 27:1-2.
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்:
“பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.”
நிறைவாழ்வு:
வடக்கு தெற்கு எதுவென்று
வாழ்வின் உண்மை தெரியாது,
இடக்கு முடக்கு செய்பவர் முன்
இன்று நிற்கும் இனியவரே,
அடக்கு முறையின் துணைகொண்டு
ஆண்டு விழுந்தோர் கூட்டத்துள்
கிடக்க விரும்பிய ஆளுநர் முன்
கிறித்து நின்றதை நினைப்பீரே!
ஆமென்.