Month: October 2016
இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!
இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!
இருளைப் பிரித்து, எழும்பும் ஒளிபோல்,
பொருளை விரித்து, அறிவொளி கொடுப்போம்.
அருளைத் திரிக்கும் பிரிவினை வெறுத்து,
ஒருமைப்பாட்டில் வெற்றியும் எடுப்போம்!
-கெர்சோம் செல்லையா.
மலையைப் பெயர்க்கும் பற்று!
கயமை வளர்த்தவே கல்வியா?
கயமை வளர்த்தவே கல்வியா?
நற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.
“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கயமை வளர்ப்பவர் யார் என்றேன்?
கற்றவர் பெயரைத்தான் சொன்னார்!
கற்ற கல்வி எதுயென்றேன்?
கல்வியும் கொள்ளைதான் என்றார்!
இயங்கும் அமைப்பே தப்பென்றால்,
எப்படி நன்மை வரும் என்றேன்?
எல்லாம் நன்மையாக்குபவர்,
இறைவன் நம்முள்தான் என்றார்!
ஆமென்.
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:15-17.
“அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.” என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ‘ ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
காசு பணம் வாங்கா மீட்பை,
கடவுள் பெயரால் அறிவித்தோம்.
பேசுகின்ற சொல்லின் எடைக்கு,
பெருந்தொகையைக் குறிவைத்தோம்.
மாசு மருவில்லா இயேசை,
மண், பொன் வாங்க மறுதலித்தோம்;
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்,
திருந்தாவிடில் அறுபடுவோம்!
ஆமென்.
உண்மையன்பால் அழகூட்டுமே!
உண்மையன்பால் அழகூட்டுமே!
சமயம் என்பது, சாயம் மட்டுமே.
சடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.
இமயம் போன்றது, இவரின் தீட்டுமே;
இதை மறைக்கவே, ஆர்ப்பாட்டமே!
அமைதி என்பது இறையில் மட்டுமே.
அன்பு உருவமே அதைக் காட்டுமே.
உமைப் படைத்ததும் அவர் திட்டமே.
உண்மையன்பால் அழகூட்டுமே!
-கெர்சோம் செல்லையா.
பொங்கி உம்மை வாழ்த்துவரே!
பொங்கி உம்மை வாழ்த்துவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 11:12-14.
“மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ‘ இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ‘ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பசியென்று வருபவரை,
பரிவுடன் பார்த்திடுவீர்.
புசியென்று உணவளித்து,
புன்னகையும் சேர்த்திடுவீர்.
கசியென்று இறையருளை,
கண் கலங்கிக் கேட்பவர்கள்,
பொசியும் அவரன்பால்,
பொங்கியுமை வாழ்த்துவரே!
ஆமென்.
இன்றே மீட்பார், கிறித்தேசு!
இன்றே மீட்பார், கிறித்தேசு!
நற்செய்தி மாலை: மாற்கு 11:8-11.
“பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ‘ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! ‘ எஇன்றே மீட்பார், கிறித்தேசு!ன்று ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
காற்று, நெருப்பு, மழையினிலே,
கடவுளின் நேர்மை காண்பவரே,
போற்றும் புவியோராட்சியிலே,
புனிதம் எதுவும் கண்டீரா?
நேற்று இன்று பார்த்ததுதான்,
நாளை திரும்பும் என்றறிந்து,
ஏற்றுக் கொள்வீர் இறையரசு;
இன்றே மீட்பார், கிறித்தேசு!
ஆமென்.
கட்டப்பட்ட கழுதை நானே!
கட்டப்பட்ட கழுதை நானே!
நற்செய்தி மாலை: மாற்கு 11: 4-7.
“அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில் அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், ‘ என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்? ‘ என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.”
நற்செய்தி மலர்:
கட்டப்பட்ட கழுதை நானே.
கட்டவிழ்க்க, பயன்படுவேனே.
திட்டமிடும் இறைவன் முன்னே,
தெண்டனிட்டுப் பணிகின்றேனே.
முட்டுந் தன்மை விட்டிடுவேனே.
முரட்டு உதையும் கைவிடுவேனே.
கெட்டவரும் மீள்வார்தானே;
கிறித்து அமர, நான் நடந்தேனே!
ஆமென்.
மிகுதியாய்ச் சேர்த்தேன்;