நாற்பது ஆண்டுகள் நடத்திய தலைவர்,
நல்லறிவாற்றல் நிறைந்த கலைஞர்,
யோர்தான் வருமுன் கடமை முடித்தார்.
யோசுவாவிடம் பொறுப்பும் கொடுத்தார்.
போர்த்திறம் கொண்டவர் என்பதால் அல்ல,
புகழ்ந்து காலடி கிடந்ததால் அல்ல;
நேர்மைப் பற்றில் அவர் பணி புரிந்தார்.
நிரப்புமிறையே யோசுவா தெரிந்தார்!
(இணைச் சட்டம் 34)