ஒற்றுமை தேவை!

ஒற்றுமையற்ற ஊழியம்!

இறை மொழி: யோவான் 17:20-21.

இறை வழி:


இரைப்பை நிறைக்கும் நோக்கம் கொண்டு,

இன்றைய கிறித்தவம் இருப்பதனால்,

உரைப்பவர் உள்ளில் ஒற்றுமை இல்லை;

ஊரும் கிறித்துவை ஏற்கவில்லை. 

நிறைப்பவர் நாட்டின் தலைவர்கள் போன்று, 

நேர்மை அற்றுப் பெருப்பதானால், 

நரைத்தவர் எனினும், நன்மை இல்லை;

நாமும் நற்கனி பார்க்கவில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

கிறித்தவ தலைவர்களே!

கிறித்தவ தலைவர்களே!

இறை மொழி: யோவான் 17: 18-19.

இறை வழி:

தலைவர் தூய்மையின் இருப்பிடமாயின்,
தொண்டரும் தூய்மை நாடிடுவார்.
அலைகிற அவரும் பெருச்சாளியாயின்,
அடியரும் அவ்வழி ஓடிடுவார்.
நிலைமை  தெரிந்த இறைமகன் அன்று,
நேர்மை ஆக்கிட  வேண்டுகிறார்.
விலைபோகாத  தலைவர்தான் தேவை.
வேண்ட, இயேசு தூண்டுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தூய்மையாவோம்!

தூய்மையாவோம்!

இறை மொழி: யோவான் 17:17. 

  1. தூயவர் இறையிடம் வந்தால்தானே,

தூய்மையும் அழுக்கும் பிரித்தறிவார். 

வாய்மை எதுவெனக் கற்றால்தானே,

வாழ்ந்து நமக்கும் பரிந்துரைப்பார்.

தீயவை விட்டு, திருந்த விரும்பின்,

தெய்வ வாக்கினைக் கற்கப்பார். 

மாயை விலகும், மயக்கம் தெளியும். 

மறைநூல் படியே நிற்போர் யார்?


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 17:16.

இறை வழி:

தொடக்கத்தின் முன்னே எவ்விடம் இருந்தோம்?

தொடர்ந்து சென்றால் எவ்விடம் முடிப்போம்?

அடக்கத்தின் பின்னே எவ்விடம் அடைவோம்?

அதற்குத் தேவைகள் எவ்விடம் பிடிப்போம்? 

கிடைக்கிற அறிவால் அவ்விடம் அறியோம். 

கிறித்துவை விட்டால் அவ்விடம் துடிப்போம். 

விடைக்குப் பணிவோம், அவ்விடம் காண்போம்;

விண்ணே வாழ்வு, அவ்விடம் நடப்போம்! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

தீமை வரினும்….

தீமையினின்று காப்பவர்!

இறை மொழி : யோவான் 17:15.

15. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இறை வழி:

இடி மின்னல், காற்றும் மழையும்,
எல்லோருக்கும் வருவதுபோல்,
அடி, உதை, வலியும் துன்பும்,
அனைவருக்கும் வந்தாலும்,
பிடி எந்தன் அருள் எனக்கூறும்,
பிரியா தெய்வம் காக்கையில்,
தடி, வெடி தீமைகள் யாவும்,
தவிடு பொடி ஆகிடுமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.

புவியோர் இல்லை!

புவியோர் இல்லை!

இறை மொழி: யோவான் 17:14.

14 – நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

இறை வழி:

உண்மை சொன்னால், பொய்மை எதிர்க்கும்;

ஒவ்வொரு பேரும் அறிந்ததே.

நன்மை செய்தால், தீவினை மிதிக்கும்;

நன்றாய் நாமும் தெரிந்ததே.

அண்மை நிகழ்வுகள் ஆயிரம் சொல்லும்;

ஆண்டவர் முதலில் சொன்னதே.

எண்ணிப் பார்த்து இறை பின் செல்லும்;

இவ்வழி இப்புவி வென்றதே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of map, poster, globe and text

72!

முடிந்தது எழுபத்திரண்டு!

எழுபத்து இரண்டு ஆண்டுகள் முடித்தும்
என்னில் இல்லையே முழுமை.
விழுந்தும் எழுந்தும் ஓடிப் பிடித்தும்,
வென்றதோ கொஞ்சம் கொழுமை.
அழுதிடும் நிலைகள் ஆயிரம் வெடித்தும்,
அருளால் மீள்வதே புதுமை.
தொழுது மகிழ, தூய நூல் படித்தும்,
தொண்டும் புரியுமே முதுமை!

-கெர்சோம் செல்லையா.

நிறை மகிழ்வு!

நிறைவான மகிழ்ச்சி !

இறை மொழி: யோவான் 17: 13.  

இறை வழி:

எதிலும் குறைவாய் இருப்பவர் நாமே;

என்பதை உணர்வாய் மானிடமே. 

அதினதன் குறையை நிரப்ப முயன்றும்,  

அடையவும் இல்லை மண்ணிடமே. 

புதிராய் இருப்பினும் புரிதல் நலமே,

பொறுமையாய்க் கேளு என்னிடமே.

மதிநிறை மகிழ்வு இயேசுவேயாகும்;

மன்றாடுவாய் விண்ணிடமே!


ஆமென். 
-கெர்சோம் செல்லையா.   

கேட்டின் மகன்!

  1. கேட்டின் மகன்!
  2. இறை மொழி: யோவான் 17: 12.

கேட்டின் மகன்!

இறை மொழி: யோவான் 17: 12.

12. நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

இறை வழி:

கேட்டைச் செய்வோர் யாரெனப் பார்த்தேன்.

கெடுமதி அலகையின் மக்களே.

கோட்டை கட்டி, கோனாய் வரினும்,

குழப்பும் அறிவிலா மாக்களே.

நாட்டின் தலைவர் வரிசையும் பார்த்தேன்,

நன்மைக்கென்றவர் பக்கமே.

ஏட்டில் எழுத இயலா வஞ்சம்,

இருக்கும் கடல் பாக்கமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.