Month: January 2014
நற்செய்தி
இன்று கேட்கும் இறைவனின் வாக்கு
நன்கு நம்மைச் சீராக்கிடட்டும்.
என்று வேண்டி எழுதும் நானும்
அன்பில்வாழ அருள் பெருகட்டும்!
நல்வாழ்த்து:
ஒழியா அன்பில் நடப்பதுதானே
உண்மையான இறைவழிபாடு.
வழியாய் வந்த கிறித்துவைத்தானே
வணங்கிப் புகழ்தல் நற்பண்பாடு!
நல்வாக்கு:
மத்தேயு 24:34-35.
”இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”
நல்வாழ்வு:
மண்ணழியும்,
மரம் செடிகொடியும் அழியும்.
விண்ணழியும்,
விளக்குச் சுடரும் அழியும்.
கண்ணுள் வந்த
காட்சிகள் அழிய, எதுதான் நிற்கும்?
எண்ணுகின்றேன்;
இயேசுவின் வாக்கு நிலைக்கக் கண்டேன்!
ஆமென்.
www.thetruthintamil.com
நற்செய்தி
மீண்டும் கேட்போம் நற்செய்தி;
ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி!
நல்வாழ்த்து:
நலமுடன் காக்கும் இறையே போற்றி;
நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி.
அலகையின் சதியை உடைப்பேன் போற்றி;
ஆவியர் வழியில் நடப்பேமீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.ன் போற்றி!
நல்வாக்கு: மத்தேயு 24:32-33.
அத்தி மர உவமை:
”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்மீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
” நல்வாழ்வு:
அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென்.
www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.
நற்செய்தி
திரண்ட செல்வம் தராத இன்பம்,
தெய்வ வாக்கால் வருவது காணும்!
வறண்ட வாழ்வைச் செழிக்க வைக்கும்
வல்ல இறையை வந்து பணியும்!
நல்வாழ்த்து:
வாழ்த்துகிறேன் இயேசையா;
வந்தென்னுள் ஆளையா.
தாழ்த்துகிறேன் நெஞ்சையா;
தங்கி எனை மீளையா!
நல்வாக்கு:மத்தேயு/Matthew 24:29-31.
மானிடமகன் வருகை:
” துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.”
நல்வாழ்வு:
இயற்கை அசையும் நேரத்திலே,
இறைமகன் வருவார் வானத்திலே.
வியக்கும் செயல்கள் காண்கையிலே,
விண்ணில் சேர்வோம் நண்பர்களே.
மயக்கும் உலகு மறைகையிலே,
மனம் வருந்துதல் பயனிலையே.
தயக்கம் தவிர்த்து இப்போதே,
தருவீர் நெஞ்சை இயேசுவுக்கே!
ஆமென்.
(பின் குறிப்பு:
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
படைத்தவர் அருளில் மகிழ்கின்றேன்.
இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை,
இறைவன் காப்பார், வேண்டுகிறேன்!
– கெர்சோம் செல்லையா)
இன்றைய நற்செய்தி!
நற்செய்தி கேட்பது நற்பேறு;
நாமும் பெறுவோம் இப்பேறு!
நல்வாழ்த்து:
நாள்தோறும் நற்செய்தி
கடவுளின் வாக்கைக் கேட்போமா?
கவலை நீங்குதல் காண்போமா?
நல்வாழ்த்து:
தேறுதல் இன்றி அலைந்தவனின்
மீறுதல் யாவையும் மன்னித்து,
ஆறுதல் தந்த அருள்வாக்கைக்
கூறுதலே இந்நல்வாழ்த்து!
நல்வாக்கு;
மத்தேயு/Matthew 24:23-25.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்வார்கள். இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.”
நல்வாழ்வு:
கள்ள வாக்கினரும்,
கறையான ஊழியரும்,
அள்ளிச் செல்கின்றார்,
அறியா மந்தையினை.
தெள்ளத் தெளிவு பெற,
திருக்கூட்டம் மீண்டு வர
கொள்ளையானவரைக்
கொணர்வது நம்கடமை!
ஆமென்.
நாள்தோறும் நற்செய்தி
படைத்தவர் வாக்கைக் கேட்போமே,
கிடைத்திடும் பண்பில் மகிழ்வோமே!
நல்வாழ்த்து:
பற்றுறுதி நீதி தரும்.
படைத்தவரைப் பணிவீர்.
பெற்று வரும் தூய்மையினால்,
பெரு நன்மை புரிவீர்.
மற்றவரும் பின் வருவர்;
மறை வழியில் நடப்பீர்.
கற்றறிந்த உண்மையிது;
கடவுளையே புகழ்வீர்!
நல்வாக்கு:
மத்தேயு/Matthew 24:19-22.
“அந்நாள்களில் கருவுற்றிருப்போர் பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! குளிர்காலத்திலோ ஓய்வு நாளிலோ நீங்கள் ஓடவேண்டிய நிலை ஏற்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்.ஏனெனில் அப்போது பெரும் வேதனை உண்டாகும். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப்போவதில்லை.அந்நாள்கள் குறைக்கப்படாவிட்டால் எவரும் தப்பிப் பிழைக்கமுடியாது. எனவே தாம் தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டுக் கடவுள் அந்நாள்களைக் குறைப்பார்.”
நல்வாழ்வு:
எரிந்தழிக்கும் இன்னலின்று உரிந்தெடுக்கும் இறையே.
விரிந்திடுதே என் துன்பம், வெறுக்கின்றேன் குறையே.
சரிந்துவிழும் வாழ்க்கையினைச் சரிசெய்தல் முறையே!
புரிந்து கொண்டு கேட்கின்றேன்; அருள் தாரும் நிறைவே!
ஆமென்.