கணக்கு!

தருவரிடத்து கணக்கைக் காட்டு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:15.

15  அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.  

கிறித்துவில் வாழ்வு:
வருமானத்தின் கணக்கைப் பார்த்து,
வறுமை என்று எழுதும் நாம்,
தருவாரிடத்து உண்மைக் கணக்கு,
தரும் நாள் வருவதை அறிவோமா?
பெருநாளன்று மகிழ்வது போன்று,
பிறர்க்கு உதவும் நம் கணக்கு,
ஒரு நாள் நம்மை நிமிரச் செய்யும்;
உண்மையில் உதவி புரிவோமா?
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
www.thetruthintamil.com

சொர்க்கம் நாடும் பண்டிதர்கள்!

‘சொர்க்கம்’ நாடும் ‘பண்டிதர்கள்’!


பக்கத்து வீட்டில் சாவு என்றால்,

பார்க்க மறுக்கும், ‘பண்டிதரே’,

இக்கட்டு நாளில் உதவிய இவரை,

எப்படி மறக்கும் மண்புதரே?

கக்கத்தில் இடுக்கிய காய் நட்டிருப்பின்,

கனிகள் பெருகிப் பயன் தருமே.

‘சொர்க்கத்தின்’ கதவைப் பூட்டுகிறீரே

சொற்படி வாரும், நலம் வருமே!


கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

அஞ்ச வேண்டாம்!

எதிரியா? எங்கே?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:14.

14  அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:
முன்னே புகழும் மனிதர்தான்,
முதுகில் குத்துவார், நம்பாதீர்.
இன்னாள் இவர்கள் பெருகுவதால், 
எப்படி வாழ்வீர்? ஏங்காதீர்!
பின்னே , முன்னே நமைக் காக்கும், 

பெரும்படை  இறைவன் இருப்பதனால்,
என்னேரம் எவர் எதிர்த்தாலும்,
ஏன்தான்  கவலை? வாங்காதீர்!
ஆமென்.

விற்பனையாளன்!

விற்பனையாளனாய் நிற்கிறேன்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 19: 11-13.

11  அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

12  பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.

13  புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:

திரும்பி வந்து பார்க்கும் வரைக்கும்,

திரவியம் கொடுத்துச் சென்றவரே,

விரும்பி நானும் உம் சொற்படியே,

வீதியில் கடையை விரித்தேனே.

பெருஞ்செல்வருக்கே  விற்பனை செய்யும்,

பேரங்காடிகள் திறக்காமல்,

வெறுங்கையோடு நிற்பவருக்கும்,

விண்ணருள் பகிரப் பிரித்தேனே!

ஆமென்.

தேடும் இறைவன்!

தேடும் இறைவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19: 10.

10  இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

தேடும் இறைவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19: 10.

10  இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

காணாமற் போன பிள்ளையைத் தேடி,
காட்டில் அலையும் பெற்றோர்போல்,
நாணாமற் சென்ற, நல் நெஞ்சற்ற,
நம்மையும் இயேசு தேடுகிறார்.
பேணாமற் போகும் பெரும்பிழை புரிதல்,
பெற்றோர் சிலரில் இருந்தாலும்,
கோணாத நேர்மை கொண்ட இறையோ,
கொடுப்பார் மீட்பு, நாடுகிறார்!
ஆமென்.

கல்லில் ஈரம்!

கல்லில் ஈரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:8-9.

8   சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.

9   இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.

கிறித்த்துவில் வாழ்வு:

இல்லில் இன்று இயேசு வந்தால்,

என்னவாகும் உள்ளம்?

நெல்லில் உள்ள பதரைப்போல, 

நீக்குவாரே கள்ளம்.

சொல்லில் காணும் நன்மை யாவும்,

செயலாகுமோ கூறும்?

கல்லில் உள்ள நீரைப்போல,

கனிவதையும் பாரும்!

ஆமென்.

உள்ளில் தூற்றுகிறார்!

உள்ளில் தூற்றுகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:6-7.

6   அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

7   அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

தீமை விட்டுத் திரும்பிக் கொண்டால்,

தெய்வம் ஏற்றுக் கொள்கின்றார்.

ஊமை நெஞ்சு உள்ளோர் கண்டால், 

உள்ளில் தூற்றிச் செல்கின்றார்.

சீமை நாட்டுச் செல்வம் என்றால்,

சிறகு விரித்துப் பறக்கின்றார்.

ஆமை போன்று அடங்கி நின்றால்,

அரிய மீட்பில் சிறக்கின்றார்!

ஆமென்.

இறங்கி வா!

கிறித்துவின் வாக்கு: லூக்கா19:5.

5   இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:
ஏற்றம் காண விரும்பும் மனிதா,
இறங்கிக் கீழே வருவாயா?
மாற்றம் தோன்றும் இடமறிந்து,
மனத்தைக் கொண்டு தருவாயா?
போற்றும் இறையின் பண்பு கண்டு,
புனிதத் தாழ்மை உறுவாயா?
தேற்றறவாளன் துணை புரிவார்;

கிறித்துவின் வாக்கு: லூக்கா19:5.

5   இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:
ஏற்றம் காண விரும்பும் மனிதா,
இறங்கிக் கீழே வருவாயா?
மாற்றம் தோன்றும் இடமறிந்து,
மனத்தைக் கொண்டு தருவாயா?
போற்றும் இறையின் பண்பு கண்டு,
புனிதத் தாழ்மை உறுவாயா?
தேற்றறவாளன் துணை புரிவார்;

தொடர்ந்து வெற்றி பெறுவாயா?
ஆமென்.

ஓதுவீர் அன்பையே!

யார் செய்தாலும், நன்மை நன்மையே;

எவர் கையாயினும், தீமை தீமையே.

பார் உய்வாகும், பயிலும் உண்மையே.

பரவும் மெய்யால், பதறும் பொய்மையே.

தேர் ஒட்டுதற்கும், தேவை திறமையே;

தேடா நாட்டார், தெரிந்தார் குறைவையே.

ஊர் போட்டியிலும் ஓதுவீர் அன்பையே;

உணர்வார் கேட்பார், ஒழிப்பீர் துன்பையே!


-கெர்சோம் செல்லையா.

குள்ளமும் கள்ளமும்!

குள்ளமும் கள்ளமும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:1-4.

1   அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,

2   ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,

3   இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,

4   அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.

கிறித்துவில் வாழ்வு:

குள்ளமென்ற அளவினைக் கண்டு,

குறை சொன்னேனென வருத்தமுண்டு.

உள்ளங்காணா மனிதனைக் கொண்டு,

ஊர் விளங்காதெனக் கருத்துமுண்டு.

கள்ள நெஞ்சு இருப்பதைக் கண்டு, 

கழுவித் துடைத்தேன், திருத்தமுண்டு. 

வெள்ளமாகும் வாக்கினைக் கொண்டு,

வெளுப்பதுதானே பொருத்தமுண்டு!

ஆமென்.