நாளும் கழுவப்பட வேண்டும்!
இறைவாக்கு: யோவான் 13: 10.
- இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
இறை வாழ்வு:
இம்மானுவேலரின் உதிரத்துள்,
இறங்கி, மூழ்கி எழுந்தாலும்,
நம்மால் தொடரும் தீவினைகள்,
நாளும் கழுவப்பட வேண்டும்.
தம்மால் இயலாதென்பவர்கள்,
தடுக்கி, தாழ விழுந்தாலும்,
அம்மாதிரியான அடியரையும்,
அன்பில் எழுப்பிட வேண்டும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.