என்னைக் கழுவும்!

என்னைக் கழுவும்!
இறை வாக்கு: யோவான் 13:8-9.

  1. பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
  2. அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

இறைவாழ்வு:

என்னைக் கழுவும், என்னைக் கழுவும்.
என் கறையகல, என்னைக் கழுவும்.
செந்நிறக் குருதி சிந்திய இறையே,
செம்மையாக்க, என்னைக் கழுவும்.
பன்முறை வழிகள் பலர் உரைத்தாலும்,
பாவியின் கறையோ நீங்கவில்லை.
உன்னருட் குருதி ஊற்றே தஞ்சம்.
உணர்ந்த எனது நெஞ்சைக் கழுவும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.