திருச்செய்தியும் அருட் பாடலும்!

யோவான் 9:6-7

அருட்பாடல்: 


உமிழ் நீர் துப்பிச் சேறுண்டாக்கி,

ஒருவன் கண்களில் பூசினார்.  

அமிழ் நீர் குளத்தில் அவனையனுப்பி,

அவைகள் திறக்கப் பேசினார்.

குமிழ் நீர் பிறவிக் கண்கள் திறக்க,

குரிசில் தம் கண் மூடினார். 

இமிழ் நீர் ஒத்த இறவா வாழ்வை,


ஏற்போர் இதனால் கூடினார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.