பேணுதலே அறிவு!

பேணுதலே  அறிவு!


கோணல் அறிவு கொண்டு நடந்தால்,

கொடுமை தானே விளைந்தெழும்.

நாணல் போன்று மனிதர் கிடந்தால்,

நன்மையும் கூட வளைந்தழும்.

பேணல் என்னும்  அறிவு பிறந்தால்,


பிழை நீங்கப் பொருள் வரும்.

காணல் என்ன? கோணல் அறிவா?


கண் திறக்க,  அருள் பெறும்!

-கெர்சோம் செல்லையா.