உடன்பாடில்லா நிலையில்
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:11-12.
11 பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
கிறித்துவில் வாழ்வு:
அடங்காப் பிள்ளையை அடிக்கச்சொன்னது,
ஆண்டவர் அருளிய திருச்சட்டம்.
உடன்பாடில்லா நிலை வந்தாலும்,
உரிமை கொடுப்பதோ அருட்திட்டம்.
முடங்காதவனாய் மறைநூல் கற்றும்,
முதியனின் அன்பு எனில் இல்லை.
கடன்காரன் நான், கனிய உதவும்.
காண்பார் வாழ்வில் உம் சொல்லை!
ஆமென்.