பட்டினிக் காலம்!
கிறித்துவி வாக்கு: லூக்கா 15:16-17.
16 அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.17 அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
அட்டிலில் உணவு பெருக்கெடுத்து,
அழகு தட்டினில் வழியும்போது,
கொட்டினார் அதனை வெளிப்புறத்து,
கொடாது ஏழை எளியவருக்கு.
பட்டினிக் காலம் என்று ஓன்று,
பலரது வாழ்வில் வரலாமென்று,
சுட்டினார் உவமை கிறித்து அன்று;
சுவையும்கூட மிகமிக நன்று!
ஆமென்.