கண்ணீரில் முடிக்காதீர்!

கற்றவராய்ப் பணி செய்யும்!
குற்றமற்றோர் என்றறிந்தும்,

கொண்டு வந்து அடிக்காதீர்.

பெற்றவரும் வெறுக்கின்றார்;

பெரும் பழியைப் பிடிக்காதீர்.

மற்றொரு நாள் தொடர்ந்து வரும்;

மதிப்பிழக்கத் துடிக்காதீர்!

கற்றவராய்ப் பணி செய்யும்;

கண்ணீரில் முடிக்காதீர்!


-கெர்சோம் செல்லையா.