விற்பனையாளன்!

விற்பனையாளனாய் நிற்கிறேன்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 19: 11-13.

11  அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

12  பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.

13  புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:

திரும்பி வந்து பார்க்கும் வரைக்கும்,

திரவியம் கொடுத்துச் சென்றவரே,

விரும்பி நானும் உம் சொற்படியே,

வீதியில் கடையை விரித்தேனே.

பெருஞ்செல்வருக்கே  விற்பனை செய்யும்,

பேரங்காடிகள் திறக்காமல்,

வெறுங்கையோடு நிற்பவருக்கும்,

விண்ணருள் பகிரப் பிரித்தேனே!

ஆமென்.