பொல்லார் கொடுக்கையிலே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:11-13.
11 உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12 அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
பசிக்கும் பிள்ளை பாலுக்கழுதால்,
பார்க்கும் தந்தை மறுப்பானோ?
புசிக்கத் தனக்கு இல்லை எனினும்,
போய் வாங்காமல் இருப்பானோ?
பிசினாறியாய் இருப்பவன்கூட,
பிள்ளைக் கென்றால் தெளிப்பானே.
ருசித்து உண்ண இன்றும் கொடுக்கும்,
இறைவனை ஏன் நீ பழிப்பானே?
ஆமென்.