நல் வழி ஒன்றே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:41-42.
41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
பல்வழி உண்டு என்று அலைந்தேன்;
பயனாய் எதுவும் கிட்டவில்லை.
சொல்வழி மறந்து நிலை குலைந்தேன்,
சொத்தும் பொருளும் ஒட்டவில்லை.
அல்வழி சென்று அறம் தொலைத்தேன்;
அதுவும் வாழ்வைக் கட்டவில்லை.
நல்வழி ஒன்றாம், இயேசுவில் மலைத்தேன்;
நடத்தும் அவரன்றித் திட்டமில்லை!
ஆமென்.